இன்டர்நெட் ஸ்பீட்.. உலக அளவில் முதலிடம் பிடித்த UAE - அங்க டவுன்லோட் ஸ்பீட் என்னென்னு தெரியுமா?

By Ansgar R  |  First Published Jul 20, 2023, 8:28 PM IST

அமீரகத்தை பொருத்தவரை இந்த முதல் இடத்தை பிடிக்க காரணமாக இருந்தது, அங்கு உள்ள இன்டர்நெட் மூலம் கிடைக்கும் டவுன்லோட் ஸ்பீட் தான்.


ஒரு காலத்தில் மணல் குவியலாக இருந்த ஒரு நகரம், இன்று டெக்னாலஜியில் பல உலக நாடுகளுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது என்றால் அது நிச்சயம் அமீரகமாகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு பல அர்பணிப்புகளை அந்த நாடும் தினந்தோறும் அளித்துவருகின்றது, அதே போல பல்வேறு வகையான சாதனைகளை நிகழ்த்தி வரும் அமீரகம் தற்பொழுது மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

Ookla என்ற நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு தகவலின் படி, கடந்த ஜூன் மாதம் நடந்த கணக்கெடுப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி இணையதள ஸ்பீடில் (Internet Speed) அமீரகம் முதலிடம் பிடித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

ஒரே சுற்றுப்பாதையில் பயணிக்கும் இரண்டு கிரகங்கள்! விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வலுவான ஆதாரம்!

அமீரகத்தை பொருத்தவரை இந்த முதல் இடத்தை பிடிக்க காரணமாக இருந்தது, அங்கு உள்ள இன்டர்நெட் மூலம் கிடைக்கும் டவுன்லோட் ஸ்பீட் தான். அமீரகத்தில் டவுன்லோட் ஸ்பீட்  204.24 Mbps ஆகவும் அப்லோட் ஸ்பீட் சுமார் 22.72 Mbpsம் உள்ளது. 

மேற்குறிப்பிட்ட அந்த நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி 2023ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மே மற்றும் ஜூன் மாதங்களில் அமீரகம் முதலிடம் பிடித்ததாகவும், ஏப்ரல் மாதத்தில் அது இரண்டாம் இடம் பிடித்ததாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல Fixed Broadband ஸ்பீடில் பார்க்கும்பொழுது உலக அளவில் அமீரகம் இரண்டாவது இடத்தையும், அரபு நாடுகளின் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Fixed Broadband பொருத்தவரை அதனுடைய வேகம் சுமார் 239.2 Mbps ஆக உள்ளது, இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தது சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது, அதனுடைய வேகம் சுமார் 247.29 Mbps ஆகும். 

ஷாக்.. இனி இந்தியாவில் Netflix பாஸ்வேர்டை பகிர முடியாது.. முழு விவரம் இதோ..

click me!