ஓட்டல் அறையில் இளம் ஜோடிகள் உல்லாசமாக இருக்கும் போது ரகசிய கேமராவில் படம்பிடித்து, அதை ஆன்லைனில் விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெறவில்லை என்றாலும் கூட தொழில்நுட்பம் எந்த அளவிற்கு ஆபத்தானதாகியுள்ளது என்பது இந்த செய்தி மூலம் தெரியவந்துள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணம் ஹனிமூன் ஜோடிகளுக்கான சொர்க்கபுரி. இங்கு உள்ள ஓட்டல்களும் ஹனி’மூன் ஜோடிகளுக்கு என்றே வடிவமைத்து கட்டப்பட்டவை. சீனாவில் மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் புதுமணத் தம்பதிகள் தங்கள் ஹனிமூனுக்கு சிக்சுவானை நோக்கி படையெடுப்பது வழக்கம். அப்படித்தான் ஸ்பெயினில் இருந்து புதுமணத் தம்பதி ஒன்று தங்கள் ஹனிமூனை உற்சாகமாக கொண்டாட சிச்சுவான் வந்துள்ளது. அவர்கள் பிரபல ஓட்டல் ஒன்றின் சூட் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் உல்லாசமாக இருக்க தயாரான போது, ரூமின் சீலிங் பகுதியில் வித்தியாசமாக ஏதோ ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்த போது ரூம் சீலிங்கில் ரகசிய கேமரா இருந்தது.ரூமில் ரகசிய கேமரா ஒன்று இருப்பதைக் கண்டு, ஓட்டல் நிர்வாகம் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளர். இதையடுத்து, ஓட்டலுக்கு வந்த காவல்துறையினர், ஓட்டலில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனையிட்ட அவர்கள், இதேபோல் மற்றொரு அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவையும் எடுத்தனர். சீலிங்கில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா, ரிமோட் மூலம் இயங்கும் வகையைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்த காவல்துறையினர், ஓட்டல் நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கேமராவுக்கும் ஓட்டல் நிர்வாகத்துக்கும் தொடர்பு இல்லை என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர். இதனை அடுத்து அந்த கேமராவை இயக்கும் ரிமோட் எங்கு இருக்கிறது என்பதை கண்டறிய முடிவு செய்தனர். இதற்கு அந்த கேமரா இயங்கும் போது தான் ரிமோட்டின் சென்சார் மூலம் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து கேமரா இயங்கும் வரை போலீசார் காத்திருந்தனர். இரவு நேரத்தில் கேமரா இயங்கத் தொடங்கியதும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தங்களின் திறமை மூலம் ரிமோட் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். சிச்சுவான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த போலீசார் அங்கிருந்த இளைஞர் ஒருவரை சுற்றிவளைத்து பிடித்தனர். காவல்துறையினர், அங்கு சோதனை நடத்தி 3 டெராபைட் அளவுக்கு இருந்த இளம் ஜோடிகள் உல்லாச வீடியோக்களை பறிமுதல் செய்தனர். ஆபாச இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதில் வாடிக்கையாளர் ஆகுபவர்களுக்கு ஹனிமூன் ஜோடிகளின் உல்லாச வீடியோக்களை அந்த இளைஞர் கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரையும், அவரக்கு உதவிய நபரையும் போலீசார் பிடித்துள்ளனர். அந்த இணையதளமும் முடக்கப்பட்டது.