இதனையடுத்து அந்த மையத்தில் உள்ளூர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் முறையான கண்காணிப்பு இல்லை என்றும், எந்த கட்டுப்பாடும் அங்கு இல்லாததும் தெரியவந்தது.
பாங்காங்கில் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைபெற்று வந்த ஆண், பெண் நோயாளிகள் சகஜமாக உடலுறவு மேற்கொண்டு வந்ததுடன், அவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாடும் அதிகரித்திருப்பதும் சிசிடிவி காட்சிகளின் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு ஆண் நோயாளிகளிடம் இருந்து பெண் நோயாளிகளை பிரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாவுக்கு பெயர்போன நாடுகளில் ஒன்று தாய்லாந்து. அங்குள்ள பட்டாயா பாங்காங் போன்ற நகரங்கள் சுற்றுலாப் பயணிகளில் உல்லாச நகரமாக இருந்திருக்கிறது. இந்நிலையில் அங்கு அரசு அமைத்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தின் அரங்கேறி உள்ள சம்பவங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் தெற்கே உள்ள சமூத் பிரகான் மகாணத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரம்மாண்ட மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 1000 படுக்கைகள் அமைக்கப்பட்டு, வைரஸ் தொற்றால் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அந்த மையத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அவர்களில் சிலர் இரவு நேரங்களில் தங்களுக்கு பிடித்தவர்களுடன் உல்லாசத்தில் ஈடுபடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. மேலும் பல்வேறு போதைப்பொருட்கள் நடமாட்டம் அங்கு அதிகரித்திருப்பதாகவும், அதனால் வாக்குவாதம், சண்டை, கைகலப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து அந்த மையத்தில் உள்ளூர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் முறையான கண்காணிப்பு இல்லை என்றும், எந்த கட்டுப்பாடும் அங்கு இல்லாததும் தெரியவந்தது. அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு நடக்கும் பல்வேறு சமூக விரோத சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் குற்றம்சாட்டினர். அதைத்தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அங்கு பொதுவாக ஆண்களும் பெண்களும் பாலியல் உறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகளும் அதில் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு போதைப் பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் 23 சிகரெட் பாக்கெட்டுகளும் மற்றும் இ-சிகரெட் களும் கைப்பற்றப்பட்டன. எனவே அந்த இடத்தில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மீண்டும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.மேலும் அந்த சிசிடிவி காட்சியில் ஏதாவது போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் பதிவாகி இருக்கிறதா என ஆய்வு செய்ததில் அது போன்ற எந்த காட்சிகளும் அதில் பதிவாகவில்லை. மேலும் அந்த சிசிடிவி காட்சிகள் தெளிவாக இல்லாததால், அந்த காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு இடையேயான பாலியல் உறவை தடுப்பதற்கு ஆண்களிடமிருந்து பெண்களுக்கு தனி வார்டுகள் அமைக்கவும் சமூத் பிரகான் மாகாண அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.