எம்ஜிஆரின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலுக்கு டான்ஸ் ஆடி ஓட்டுக்கேட்ட மலேசிய அரசியல் தலைவர்!

By sathish k  |  First Published Sep 7, 2018, 5:35 PM IST

பெட்டாலிங்க: மலேசியாவில் இடைத் தேர்தல் ஒன்றுக்கான பிரசாரத்தின் போது எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாடலுக்கு டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்தார்  பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
 
பெட்டாலிங்க: மலேசியாவில் இடைத் தேர்தல் ஒன்றுக்கான பிரசாரத்தின் போது எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாடலுக்கு டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்தார்  பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

மலேசியாவின் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் டெசோ மெந்தாரியில் நேற்று நடைபெற்றது.

Latest Videos

இந்த பிரசாரத்தின் போது கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது. நம்ம ஊர் பாணியில் எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர் எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால் பாடலுக்கு சவுக்குடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த பிகேஆர் தேசியத் தலைவர் அன்வர் திடீரென அந்த நபருடன் இணைந்து எம்ஜிஆரைப் போல டான்ஸ் ஆடினார். இதை பார்த்த பொதுமக்கள் கைதட்டி உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.
 
click me!