கொழும்பில் உச்சக்கட்ட பதற்றம்- அரசுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் படையெடுப்பு

By thenmozhi gFirst Published Sep 5, 2018, 2:50 PM IST
Highlights

இலங்கை அரசை கவிழ்ப்போம் என்கிற முழக்கத்துடன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் கொழும்பு நோக்கி படையெடுத்திருப்பதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் முழுவதும் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டு பேரணி கொழும்பில் நடைபெறும் என ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே அறிவித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டம் எங்கே நடைபெறும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

இதனால் தலைநகர் கொழும்பில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான வாகன நெரிசல் எதுவும் இல்லை. கொழும்பு நகரில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாமல் ராஜபக்சே கூறுகையில், கொழும்பு நோக்கி ஆதரவாளர்கள் புறப்பட்டுவிட்டனர். திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.

click me!