உலக அளவில் உள்ள மனிதர்களின் கற்பனை திறனை, அவர்கள் ஓட்டும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்களில் நம்மால் நிச்சயம் பார்க்கமுடியும். அந்த அளவிற்கு அவை கற்பனை திறன் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் இங்கே ஒருவரின் கற்பனை திறன் போலீசாரின் கண்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
மலேசிய சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் (சட்டம் 333) கீழ், விதிமுறைகளை மீறுபவர்களைத் தேடும் நடவடிக்கையில் மலேசியா போக்குவரத்துக்கு போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகன தணிக்கையில் சிக்கிய ஒரு இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட் ஒரு விரல் நகத்தின் அளவை விட சிறியதாக இருந்த நிலையில், அது போலீசாருக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.
இந்த 2023 ஆம் ஆண்டுக்கான மோட்டார் சைக்கிள்களுக்கான ஒரு சிறப்பு தணிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் 1 முதல் 30 வரை நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர் மலேசிய போலீசார். இந்த செயல்பாட்டின் போது, "டிராஃபிக் லைட் சிக்னல்களைக் கடைப்பிடிக்கத் தவறும் வாகன ஓட்டிகளையும், மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மெட் பயன்படுத்தாதவர்களையும்" போலீசார் நிறுத்தி அபராதம் விதித்து வந்தனர்.
அப்போது அந்த வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை நிறுத்திய போலீசார், நம்பர் பிளாட் இருக்கு, அனால் அதில் எங்கப்பா நம்பரை காணவில்லை என்று கேட்க, அந்த நபர் தனது விறல் வைத்து அந்த சிறிய நம்பரை காட்டியுள்ளார். இதை கண்டு அதிர்ந்த போலீசார், உங்க லொள்ளுக்கு ஒரு அளவு இல்லையா என்று அந்த நபரை கடிந்துகொண்டுள்ளனர்.
அந்நாட்டு சட்டப்படி சுமார் 2.3 மீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும்போது, வண்டியின் நம்பர் பிளேட் தெளிவாக தெரியும் வண்ணம் தான் அதை வைக்கவேண்டும். ஆனால் அந்த நபர் அப்படி செய்யாத பட்சத்தில், அவருக்கு மலேசியா நாட்டின் சட்டப்படி ரூபாய் 5000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கிம்-ஜாங் உன்-ன் ஆடம்பர ரயிலில் இத்தனை வசதிகளா? புடினின் சொகுசு ரயிலில் கூட இந்த வசதிகள் இல்லையாம்