மலேசியாவில் இருந்து சிங்கப்பூரிக்கு அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1600 கிலோ காய்கறிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு சுமார் ஆயிரத்து 600 கிலோவுக்கும் அதிக காய்கறிகள் கொண்டு வரப்பட்டதை
சிங்கப்பூர் உணவு அமைப்பு அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். அவைகளை பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்ய காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களை குறிவைத்து கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
உட்லண்ட்ஸ் எல்லை சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டு வாகனங்களைத் தடுத்து நிறுத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், அவற்றை பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த வாகனங்களில் இருந்த தக்காளி, அவரைக்காய், கேரட், சிவப்பு மிளகாய், கீரை, வெங்காயம் போன்ற சுமார் ஆயிரத்து 600 கிலோவுக்கும் அதிக அதிகமான காய்கறிகள் இருந்ததை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து முறைப்படியான இறக்குமதி ஆவணங்கள் இல்லாததால் அவைகளை மொத்தமாக பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இறக்குமதி நிபந்தனைகள்
சிங்கப்பூரைப் பொறுத்தவரை இறக்குமதியாகக்கூடிய உணவுப்பொருள்கள், காய்கறிகள் அனைத்தும் உணவு அமைப்பின் நிபந்தனைகளை கருத்தில் கொள்ள வேண்டும். முறைப்படி உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் மட்டுமே பழங்களையும் காய்கறிகளையும் இறக்குமதி செய்ய முடியும்.
காய்கறி, பழங்களை இறக்குமதி செய்வோர், என்னென்ன காய்கறிகள் இருக்கின்றன என்பதும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்.
உடல் நலன் பாதிப்பு!
எனவே, சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் காய்கறிகளால் உடல் நலன் பாதிப்பு ஏற்படக்கூடும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. அவற்றில் அதிகளவில் பூச்சி மருந்து கலந்திருக்கக்கூடும். அத்தகைய காய்கறி, பழங்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் உடல்நலனுக்குப் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா இந்திய மாணவர் மரணம்! பயண வழிகாட்டு நெறிமுறைகள் மறுஆய்வு செய்ய கோரிக்கை
மேலும், சட்டவிரோதமாக பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்வோருக்கு 10,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் மற்றும் அல்லது மூன்றாண்டுகளுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்க முடியும் என சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவிக்கிறது.