கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஒன்று மொராக்கோவை தாக்கியுள்ளது. இந்த மிக மோசமான நிலநடுக்கம் 2,000க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது என்று அந்நாட்டு அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர நிலநடுக்கத்தால் இன்னும் 1400 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் இன்னும் அதிகமான சிக்கியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. அதிகாரிகள் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்த நிலையில், செஞ்சிலுவை இயக்கியத்தினர் இந்த சேதத்தை சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளார்.
மொரோக்காவின் சுற்றுலா நகரமான மராகேஷிலிருந்து தென்மேற்கே சுமார் 72 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவில் உள்ள மலைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுமார் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.
undefined
வேலை விசாவில் புதிய மாற்றம்.. குவைத் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது, இந்த நிலநடுக்கம் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களை வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம்புகுந்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள மலை கிராமமான Tafeghagteல், கிட்டத்தட்ட அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
"எனது மூன்று பேரக்குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் இந்த கோர சம்பவத்தில் இறந்துவிட்டதாகவும், அவர்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் தான் சிக்கியுள்ளனர் என்றும்" அப்பகுதி கிராமவாசியான ஓமர் பென்ஹன்னா, (வயது 72), ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சற்று முன்னதாக தான் அவர்களோடு தான் விளையாடிக்கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
வட ஆபிரிக்க இராச்சியத்தைத் தாக்கிய மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவாகும், மேலும் ஒரு நிபுணர் இதை இப்பகுதியில் கடந்த 120 ஆண்டுகளில் ஏற்படாத மிகப்பெரிய நிலநடுக்கம் என்று விவரித்துள்ளார். சனிக்கிழமை பிற்பகுதியில் உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் குறைந்தது 2,012 பேரைக் கொன்றுள்ளது என்றும். பெரும்பான்மையானவர்கள் அல்-ஹவுஸ், நாட்டின் மையப்பகுதி மற்றும் தாரூடன்ட் மாகாணங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.