சிங்கப்பூரின் முன்னாள் நிதியமைச்சர் காலமானார்.. 40 வருட அரசியல் பயணம் - புகழாரம் சூட்டிய பிரதமர் லீ!

By Ansgar R  |  First Published Sep 9, 2023, 5:09 PM IST

Singapore : சிங்கப்பூரின் முன்னாள் நிதி அமைச்சர் ரிச்சர்ட் ஹூவு நேற்று செப்டம்பர் 8ம் தேதி காலமானார். தனது வாழ்நாள் முழுவதும் தேசத்திற்கான அவருடைய பங்களிப்பு மற்றும் சேவைக்கு நமது நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


சுமார் 16 ஆண்டுகள் சிங்கப்பூரின் நிதியமைச்சராக அவர் பணியேற்றியுள்ள நிலையில், சிங்கப்பூர் நாட்டில் மிக நீண்ட காலம் நிதியமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிச்சர்ட் ஹு, நேற்று செப்டம்பர் 8ம் தேதி அவர் தனது 96வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஹூவை தனது நெருங்கிய நண்பர் என்று விவரித்த PM லீ அவர்கள், தாங்கள்  இருவரும் கடந்த 1984ம் ஆண்டு தான் அரசியலில் நுழைந்து, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றியதாக அவர் தனது பதிவில் பெருமையோடு கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

ஜி20 நாடுகளுடன் இணைந்த ஆப்பிரிக்க யூனியன்! ஜி21 என புதிய பெயர் வைக்கப்பட வாய்ப்பு

"அவரது புத்திசாலித்தனமான அறிவுரை, வலுவான உணர்வு மற்றும் சிங்கப்பூரர்கள் மீதான ஆழ்ந்த அக்கறை ஆகியவற்றை நான் எப்போதும் அன்புடன் நினைவில் கொள்வேன்" என்றும் பிரதமர் லீ கூறினார். GIC இல் - ஹு ஒரு குழு உறுப்பினராகவும், தலைவராகவும் பணியாற்றியபோது, சிங்கப்பூர் பிராந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் வளர்ச்சியை அவர் அப்போதே கணித்தவர் என்றார். 

மேலும் கடந்த 1994 ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ஹூ, சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தினார் என்றும் PM லீ குறிப்பிட்டார். "இது எங்கள் சர்வதேச போட்டித்தன்மைக்கு சவால் விடும் வகையில், பல நாடுகளும் இதையே செய்து கொண்டிருந்த நேரத்தில், வருமானம் மற்றும் பெருநிறுவன வரிகளை குறைக்க எங்களுக்கு உதவியது" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார். 

"அரசாங்கத்தின் செலவினத் தேவைகள் அதிகரித்து வந்த நிலையில், இது ஒரு நெகிழ்ச்சியான வருவாயை உருவாக்கியது" என்றும் அவர் கூறினார். "இழப்பு மற்றும் துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் லீ தனது பதிவை முடித்தார்.

மொரோக்கோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 632ஆக உயர்வு. பதைபதைக்க வைக்கும் வீடியோ..

click me!