ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ள சீன ஆராய்ச்சியாளர்கள்.. பறவை போல இருக்கும் டைனோசர்? புதைபடிவம் கண்டுபிடிப்பு!

By Ansgar R  |  First Published Sep 8, 2023, 7:02 PM IST

சீனாவில் பறவை போன்ற உடல் அமைப்பு கொண்ட டைனோசரின் புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டு அந்நாட்டு நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் சுமார் 148 முதல் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, நீண்ட கால்கள் கொண்ட ஃபெசன்ட் (ஒரு வகை கோழி) அளவிலான டைனோசர் அதுவென்று கூறப்படுகிறது.


இது அந்நாட்டு அர்ச்சியாளர்களால் Fuijianvenator prodigiosus என்று பெயரிடப்பட்டுள்ளது, அதாவது லத்தீன் மொழியில் "Fuijian நகரத்து வினோதமான வேட்டைக்காரர்" என்று பொருள். இந்த புதைபடிமம் 2022 இல் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இந்த உயிரினம் ஜுராசிக் காலத்திலிருந்து, இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகால பறவை போன்ற டைனோசர்களில் ஒன்றாகும் என்று நம்பப்படுகிறது.

"இது உண்மையில் பறவைகளின் குழுவிற்குள் ஒரு வித்தியாசமான விலங்கு" என்று சால்ட் லேக் சிட்டியில் உள்ள யூட்டா பல்கலைக்கழகத்தின் பழங்காலவியல் நிபுணர் மார்க் லோவன் நேச்சரிடம் கூறியுள்ளார். கண்டறியப்பட்ட அந்த உயிரினம் பறக்கும் திறன் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றும், ஆனால் டைனோசர்கள் பற்றி கூறப்படும் பறவை-பரிணாமக் கதைகளுடன் இவை ஒத்துப்போகவில்லை என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

Latest Videos

undefined

கம்மி ரோட்டுக்கு பீர் தருகின்றோம்.. ஆசையோடு ஆர்டர் போட்ட நபருக்கு ஆப்பு வைத்த Hackers - கடுப்பில் காவல்துறை!

அதாவது டைனோசர்கள் நாளடைவில் பரிணாமவளர்ச்சி அடைந்து இன்ற காலத்தில் உள்ள கோழிகளை போன்ற பறவைகளாக மாறியுள்ளது என்று ஒரு நம்பிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பல பழங்கால ஆராய்ச்சியாளர்கள் முதல் பறவை இனம் என்பது, ஆர்க்கியோப்டெரிக்ஸ் எனப்படும் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான இறகுகள் கொண்ட டைனோசர் என்று கருதுகின்றனர். மேலும் இந்த புதைபடிமத்தின் எடை சுமார் 1.4 பவுண்டுகள் (641 கிராம்) எடை கொண்டுள்ளதாலும், டைனோசர் போன்ற தோற்றம் கொண்டுள்ளதால், இது மிகமுக்கிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. 

சிங்கப்பூரில் பழைய விரைவு ரயில் ஒன்றில் திடீரென கிளம்பிய வெண்புகை! பயணிகள் வெளியேற்றம்

click me!