Singapore : சிங்கையில் காவல்துறையினர் எவ்வளவு தான் கத்தி கத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், மீண்டும் மீண்டும் இணைய வழியில் திருடும் ஹேக்கர்களின் வலையில் தொடர்ச்சியாக மக்கள் சிக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள 50 வயது நபர் ஒருவர், Facebook மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட மலிவான மதுபானத்தை வாங்க விருப்பம் தெரிவித்து, பெரும் தொகையை இழந்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தற்போது சிங்கப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் அட்ரியன் காம் என்கின்ற அந்த 50 வயது நபருக்கு அவருடைய முகநூல் பக்கத்தில் 50 சதவீத தள்ளுபடியோடு மதுபான விற்பனை நடப்பதாக ஒரு செய்தியை பார்த்துள்ளார். உடனே "மிஸ்டர் டிஸ்ஜி" என்கின்ற முகநூல் கணக்கிற்கு அவர் முகநூல் மெசஞ்சர் மூலம் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
மேலும் 12 ஸ்கேன்கள் கொண்ட ஆசாகி பியர் வாங்க தான் விருப்பம் தெரிவிப்பதாகவும், அது சுமார் 42 சிங்கப்பூர் டால ர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்கப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் நீதி சம்பந்தமான பெரிய பொறுப்பில் இருந்து வருகிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் பீர் ஆர்டர் செய்த நிறுவனம் கேஷ் ஆன் டெலிவரி வசதி வைத்திருந்தால், அதை ஒரு போலியான செய்தி என்று தான் சந்தேகிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு! எந்தெந்த நாட்டு தலைவர்கள் வரப்போகிறார்கள் தெரியுமா.? முழு விபரம்
இவர் அந்த முகநூல் பக்கத்திற்கு செய்தி அனுப்பிய நிலையில், ஒரு குறிப்பிட்ட செயலியை டவுன்லோட் செய்து, அதன் மூலம் அந்த சலுகையை பெற்றுவிடலாம் என்று கூற, அவரும் அதை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருடைய கணக்கிற்கு 10 சிங்கப்பூர் டாலர் பணம் வந்ததாக மெசேஜ் வர, அந்த மோசடி கும்பல், அந்த பணம் வந்திருக்கிறதா என்பதை அவரது வங்கி கணக்கிற்கு சென்று பார்க்கசொல்லியுள்ளனர்.
ஆனால் அவருடைய போன் ஹேக் செய்யப்பட்டிருப்பதை அறியாத அவரும் அவ்வாறே செய்ய, பீர் வந்து சேரவில்லை. இந்த சூழலில் தான், பல குளறுபடிகளை கடந்த நிலையில், அவருடைய கணக்கில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு கணக்குகளுக்கு தொடர்ச்சியாக பணம் செல்ல துவங்கியுள்ளது. ஒருகட்டத்தில் அவருடைய கணக்கில் இருந்து சுமார் 60000 சிங்கப்பூர் டாலர் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் நடந்து வருவது, சிங்கப்பூரர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் கடலோர பாதுகாப்பு, வெள்ள தடுப்புக்கென முதல் ஆய்வு நிலையம் அமைப்பு