பேய் ஓட்ட இதெல்லாம் செய்யணும்.. தோழியை ஏமாற்றி கற்பழித்த நபர் - சிங்கப்பூர் அரசு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

By Ansgar R  |  First Published Sep 7, 2023, 6:33 PM IST

சிங்கப்பூரில் தன்னுடன் பயின்ற பெண் தோழியின் மேல் காதல் வயப்பட்ட நிலையில், 20 வயதான அந்த நபர், ஆவிகள் சில அவரையும், அவருடைய சகோதரியையும் பின்தொடர்ந்து வருவதாக கூறி நம்பவைத்து, அந்த பெண் தோழியை கற்பழித்த சம்பவத்தில் அந்த நபருக்கு தண்டனை கிடைத்துள்ளது.


இந்த சம்பவம் 2019ம் ஆண்டு நடந்துள்ளது, அப்போது தனது 22 வயதில் இருந் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, பேய்களை அவரிடம் இருந்து ஓட்ட இந்த சடங்குகள் அவசியம் என்று கூறி, அந்த பெண்ணை பாலியல் ரீதியாக அணுகி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அந்த நபர். சம்பவம் நடந்தபோது அந்த நபரின் வயது 20. 

சிங்கப்பூரின் IMH (Institute of Mental Health) அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் IQ, அதாவது intelligence quotient அளவு, சராசரி நபர்களை விட சற்று குறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

குற்றவாளியோடு கல்வி பயின்று வந்த அந்த பெண், அந்த நபரை விட வயதில் மூத்தவராக இருந்த நிலையிலும், அடிக்கடி அவரை அண்ணன் என்று தான் அழைப்பார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றது. இந்த சூழலில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த பெண்ணின் முகநூல் வழியாக அவரை தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்த குற்றவாளி ஒரு கட்டத்தில் பொது இடங்களில் இருந்து அவருடைய வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று விட்டு வரும் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். 

Singapore Dengue Fever | சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு பரவல்! உடனடி நடவடிக்கைக்கு அழைப்பு

இது நாளடைவில் அந்த பெண் மீது காதல் ஆக மாறி உள்ளது, இருப்பினும் அந்த பெண் அவரை அண்ணன் என்று அழைத்து வந்ததாகவும், அவர் மீது காதல் வயப்படவில்லை என்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றது. 

அதன் பிறகு அந்த பெண்ணிடம் ஆலய வழிபாட்டில் தான் அதிக ஆர்வம் உள்ளவர் என்றும், ஆவிகளை ஓட்ட தனக்கு தெரியும் என்று அந்த பெண்ணிடம் பொய் உரைத்துள்ளார். மேலும் அவரையும், அவருடைய சகோதரியையும் சில ஆவிகள் பின் தொடர்வதாகவும், அதனை போக்க தான் பரிகாரம் செய்ய உள்ளதாகவும் அவர் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

 ஒரு நாள் தன்னுடைய இல்லத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற அவர், அவருடைய உடலில் இருக்கும் ஆடைகளை களைந்து விட்டு, தனது கைகளால் அவர் உடம்பில் சில குறியீடுகளை வரைய வேண்டும் என்று கூறி வற்புறுத்தி உள்ளார். அந்த பெண்ணோ அதற்கு பயந்த நிலையில், வலுக்கட்டாயமாக இரு சந்தர்ப்பங்களில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அந்த நபர். 

இப்படி அடிக்கடி நடக்க, கடந்த ஜூலை 27ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு அந்தப் பெண் தனக்கு அந்த நபர் நடத்திய சில சடங்குகள் பற்றி தெரிவிக்க, அதிர்ந்த அவருடைய நண்பர்கள் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து அவரிடம் விசாரித்தபொழுது அந்த பெண்ணை அவர் இருமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. அந்த ஆண்டே அவர் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று செப்டம்பர் 7ஆம் தேதி அவருக்கு தீர்ப்பிடப்பட்டுள்ளது அவருக்கு 18 ஆண்டுகள் 11 மாதம் மற்றும் மூன்று வாரம் சிறை தண்டனையும், 16 சவுக்க அடியும் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிஸ் அடித்து பெண்ணை காருக்குள் ஏற்றி கசமுசா: போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

click me!