சிங்கப்பூர் நாட்டில், கடலோரப் பாதுகாப்பு மற்றும் வெள்ள தடுப்பு நிர்வாகத்துக்கென முதன்முறையாக ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டில், கடலோரப் பாதுகாப்பு மற்றும் வெள்ள தடுப்பு நிர்வாகத்துக்கென முதன்முறையாக ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. PUB எனும் தேசியத் தண்ணீர் அமைப்பும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த பாதுகாப்பு ஆய்வு நிலையத்தை ஆரம்பித்துள்ளன.
உயரும் கடல் மட்டம், கடல்மண் அறிப்பு ஆகியவற்றை சமாளிப்பதில் உதவுவதற்கும், கடல் சார் ஆய்வுத்துறையில் அதிக திறமைமிக்கவர்களை சேர்க்க இந்த ஆய்வு நிலையம் முயற்சிகளை மேற்கொள்ளும்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்டம் உயர்வு மற்றும், மண் அறிப்பு அவைகளை கையாள கடல்சார் அறிவியலாளர்கள், பொறியியலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த திட்டத்தின் மூலம் திட்டமிடப்படுகிறது. ஏற்கெனவே நிலையம் 9 ஆய்வுத் திட்டங்களில் சிங்கப்பூர் அரசு பணியாற்றி வருகிறது.
கடலோர சுற்றுச்சூழலை மேம்படுத்துவதிலும் சிறந்த தீர்வுகளைக் கண்டறிவதிலும் இந்த பாதுகாப்பு நிலையம் கவனம் செலுத்த உள்ளது. கான்கிரீட் பாறைகள் அல்லது இயற்கையான சதுப்புநிலப் பகுதிகளைக் கடலோரப் பாதுகாப்பு அரண்களாகப் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்படும்.
கேக் சாப்பிட ஆசைப்பட்டது ஒரு குத்தமா? கைவரிசையை காட்டிய Hackers - மொத்தமா அபேஸ் பண்ணது எத்தனை கோடி தெரியுமா?
PUB-ன் கடலோரப் பாதுகாப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு நிர்வாக ஆய்வுத் திட்டத்தின்கீழ் சுமார் 125 மில்லியன் சிங்கப்பூர் டாலர் நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி ஆய்வு நிலையம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும். மற்ற உள்ளூர் பல்கலைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.