அடுத்த மாதம் பெய்ஜிங்கில் சீனா மூன்றாவது பெல்ட் ரோடு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இத்தாலியின் விலகல் முடிவு வெளியாகியுள்ளது.
ஜி20 மாநாட்டில் சீனப் பிரதமர் லி கியாங்கிடம் பேச்சுவார்த்தை நடத்திய இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்தில் இருந்து இத்தாலி வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டையொட்டி சீனப் பிரதமர் லீ கியாங்கை சனிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். சீனாவின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பெல்ட் ரோடு திட்டம் இத்தாலிக்கு எதிர்பார்த்த அளவுக்கு நன்மை அளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் இத்தாலிய அரசாங்கம் பெல்ட் ரோடு திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத்தை வெளிப்படையாகக் காட்டியிருக்கிறது.
undefined
ஜி20 உச்சிமாநாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பின்போது, சீனாவுடன் நட்புறவைப் பேண விரும்பும் அதே வேளையில், பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இருந்து இத்தாலி விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் மெலோனி சீனப் பிரதமர் லீயிடம் கூறியுள்ளார்.
2019 இல் இத்தாலி அதிகாரபூர்வமாக பெல்ட் ரோடு ஒப்பந்தத்தில் இணைவதாக கையெழுத்திட்டது.
ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய இந்தியா! 5 முக்கிய விளைவுகள் என்னென்ன?
செப்டம்பர் 5ஆம் தேதி பெய்ஜிங்கிற்குச் செற்ற இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி, பெல்ட் ரோடு பற்றி விமர்சன ரீதியாக பேசியதாகச் செய்திகள் தெரிவித்தன. அப்போதே பெல்ட் ரோடு "எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை" என்றும் இத்தாலி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் பெய்ஜிங்கில் சீனா மூன்றாவது பெல்ட் ரோடு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இத்தாலியின் இந்த முடிவு வெளியாகியுள்ளது. இது பற்றி இத்தாலி அரசு இறுதி முடிவெடுக்க வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் இருப்பதாகவும் மெலோனி ஏற்கெனவே கூறியிருந்தார். தற்போது இத்தாலி பெல்ட் ரோடு திட்டத்தில் இணைந்து இருந்தாலும்கூட, சீனாவுடன் வலுவான வர்த்தக இணைப்புகளைக் கொண்ட G7 நாடுகளில் ஒன்றாக இல்லை எனவும் மெலோனி கூறியிருந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இணைந்தது. ஆனால், அந்நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க அது சிறிதும் உதவி செய்யவில்லை என்று இத்தாலிய பாதுகாப்பு மந்திரி கைடோ க்ரோசெட்டோ சென்ற ஜூலை மாதம் கூறியிருந்தார்.
வில்வித்தை உலகக் கோப்பை: வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பிரதமேஷ் ஜாவ்கர்!