ரஷ்யாவின் கனவு தகர்ந்தது! லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது!

By SG Balan  |  First Published Aug 20, 2023, 2:46 PM IST

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) அறிவித்துள்ளது.


ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது என்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மென்மையான தரையிறக்கம் மேற்கொள்ள முடியவில்லை எனவும் அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) அறிவித்துள்ளது. சனிக்கிழமையன்று சந்திரனில் தரையிறங்குவதை நோக்கி மேற்கொண்ட நடவடிக்கையின்போது தொழில்நுட்பக் கோளாறால் அவசரநிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியள்ளது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய விண்கலம் லூனா-25. இந்த விண்கலம் அந்நாட்டின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி சோயுஸ் 2.1வி ராக்கெட்டில் விண்ணுக்கு ஏவப்பட்டது. கடந்த புதன்கிழமை நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

Tap to resize

Latest Videos

லூனா-25 கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலம் நிலவில் ஆய்வு மேற்கொள்ளவதற்காக ரஷ்யாவால் அனுப்பப்பட்டது. லூனா-25 நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு செய்யும் பணியை மேற்கொள்ள இருந்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

கர்நாடகாவில் டிஆர்டிஓ ட்ரோன் விபத்து; சோதனையின்போது நடந்த விபரீதம்

லூனா-25 விண்கலத்தின் லேண்டரில் பொருத்தப்பட்ட கேமராக்கள் ஏற்கனவே விண்வெளியில் இருந்து பூமி மற்றும் சந்திரனின் தொலைதூர காட்சிகளை படமெடுத்து அனுப்பியுள்ளது.

வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி! டிசம்பர் வரை உள்நாட்டுத் தேவையை சமாளிக்க நடவடிக்கை

ஜூன் மாதம், ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் யூரி போரிசோவ், அதிபர் விளாதிமிர் புடினிடம், இதுபோன்ற பணிகள் ஆபத்தானவை என்றும், வெற்றி வாய்ப்பு 70 சதவிகிதம் தான் இருக்கும் என்றும் கூறினார் எனத் தகவல்கள் வெளியாகின.

உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக எதிர்கால விண்வெளிப் பயணங்களில் மாஸ்கோவுடன் ஒத்துழைக்க மாட்டோம் என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி அறிவித்தது. அதற்கு பதில் அளித்த ரஷ்யா, ஐரோப்பாவின் ஆதரவு இல்லாவிட்டாலும் தனது சொந்த திட்டத்துடன் நிலவை ஆராய்ச்சி செய்யும் திட்டத்தை மேற்கொள்வும் என்று கூறியது.

1957ஆம் ஆண்டு ரஷ்யா ஸ்புட்னிக் 1 என்ற தனது முதல் விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. பின்னர், 1961 இல் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் அந்நாட்டின் சார்பில் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார். 1976 இல் லூனா -24 என்ற விண்கலத்தை ரஷ்யா முதல் முறையாக நிலவுக்கு அனுப்பியது. 47 ஆண்டுகள் கழித்து லூனா-25 விண்கலத்தை அனுப்பியது.

ரஷ்யாவைப் போல இந்தியா சந்திரனின் தென் துருவத்திற்கு அனுப்பியிருக்கும் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் லூனா-25 தரையிறங்குவதில் சிக்கல்! விண்கலத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு!

click me!