இந்தியாவில் மட்டுமன்றி பாகிஸ்தானிலும் இந்திய விமானி அபிநந்தன் விடுதலைக்கு ஆதரவாகவும், போர் வேண்டாம் என்றும் எங்களுக்குத் தேவை அமைதிதான் என்றும் குரல்கள் எழுந்தன. குறிப்பாக லாகூரில் அதிக அளவிளான பாகிஸ்தானியர்கள் பொது இடத்தில் ஒன்று கூடி அபிநந்தனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மட்டுமன்றி பாகிஸ்தானிலும் இந்திய விமானி அபிநந்தன் விடுதலைக்கு ஆதரவாகவும், போர் வேண்டாம் என்றும் எங்களுக்குத் தேவை அமைதிதான் என்றும் குரல்கள் எழுந்தன. குறிப்பாக லாகூரில் அதிக அளவிளான பாகிஸ்தானியர்கள் பொது இடத்தில் ஒன்று கூடி அபிநந்தனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தது. தங்கள் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவியதால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம், பதில் நடவடிக்கையாக இந்திய எல்லைக்குள் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை மீண்டும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின்போது இந்திய விமானப்படை விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதுடன், விமானி அபினந்தனை சிறைப்பிடித்தது.
இந்த எதிர்தாக்குதல்கள் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. இரு நாடுகளும் தங்கள் படைகளை தயார்படுத்தின. இதனால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்தது. அணு ஆயுத வல்லமை கொண்ட இரண்டு நாடுகளும் மோதிக்கொண்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதால் போரைத் தவிர்க்கும்படி பல்வேறு நாடுகள் வலியுறுத்தின.
அதேசமயம் பாகிஸ்தானில் பிடிபட்ட விமானி அபினந்தனை, ஜெனிபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைத்தனர். இரு நாடுகளில் உள்ள பொதுமக்களும் போரை விரும்பவில்லை. அபினந்தன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை பலரும் சமூக வலைத்தளம் மூலமாக வலியுறுத்தி வந்தனர்.
இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் அபினந்தன் விடுதலைக்கு ஆதரவாகவும், போருக்கு எதிராகவும் குரல்கள் எழுந்தன. போர் வேண்டாம், அமைதி வேண்டும், போரினால் தீர்வு ஏற்படாது, இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட்டு பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி லாகூரில் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.