ஆளுயரத்திற்கு எழுந்து நின்று படமெடுத்த ராஜநாகம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

By Narendran S  |  First Published Mar 2, 2023, 8:38 PM IST

ராஜநாகம் ஒன்று பல அடி மேலெழுந்து நின்று படமெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ராஜநாகம் ஒன்று பல அடி மேலெழுந்து நின்று படமெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்மைகாலமாக இணையத்தில் பாம்புகள் தொடர்பான வீடியோ அதிகம் பகிரப்படுகின்றன. அதில் சில வைரலும் ஆகின்றன. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ காண்பவர்களை பதைபதைக்க வைக்கும் வகையில் உள்ளது. ஒரு ராஜ நாகம் அதன் முழு உயரத்திற்கு எழுந்து நின்று படமெடுக்கும் வீடியோ தற்போது நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை இந்திய வன பணி (IFS) அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: சாலைகள் வழி பயணம்! அற்புத அனுபவத்தைக் கொடுக்கும் சுற்றுலாத் தலங்கள்!

Tap to resize

Latest Videos

அதில், ராஜநாகம் உயர எழுந்து படமெடுக்கும் காட்சி  பார்வையாளர்களை திகைக்க வைத்துள்ளது. இந்த வீடியோ 186k  பார்வைகளையும் 5,000 லைக்குகளையும் பெற்றுள்ளது. பல ட்விட்டர் பயனர்கள் பாம்பின் அளவு மற்றும் அழகைக் கண்டு வியந்தாலும், மறுபக்கம் அதன் ஆபத்தை எண்ணி அச்சம்கொள்கின்றனர். ராஜநாகம் உலகின் மிக நீளமான மற்றும் அதிக விஷமுள்ள பாம்புகள் என்று கூறப்படுகிறது. இவை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் காடுகளை தாயகமாகக் கொண்டவை.

இதையும் படிங்க: சூப்பர் நோவா! நாசா ஹபிள் தொலைநோக்கி பதிவு செய்த நட்சத்திர வெடிப்பு காட்சிகள்!

யானையைக் கொல்லும் அளவுக்குக் கொடிய விஷத்தை கொண்டது இந்த ராஜநாகம். இந்த குறிப்பிட்ட இனம் 18 அடி வரை வளரும் என சொல்லப்படுகிறது. இவ்வளவு ஆபத்தான பாம்பு வகையாக இருந்தாலும் ராஜநாகம் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கொறித்துண்ணிகள் மற்றும் பிற சிறிய பாலூட்டிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, மேலும் அவற்றின் விஷம் அதன் மருத்துவப் பயன்பாடுகளுக்காக தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. காடுகளில் ஒரு ராஜா நாகப்பாம்பை சந்திப்பது ஒரு பயமுறுத்தும் அனுபவமாக இருந்தாலும், அவை இயற்கை உலகின் ஒரு முக்கிய அங்கம் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

The king cobra can literally "stand up" and look at a full-grown person in the eye. When confronted, they can lift up to a third of its body off the ground. pic.twitter.com/g93Iw2WzRo

— Susanta Nanda (@susantananda3)
click me!