சிட்னியில் தமிழக இளைஞர் சுட்டுக்கொலை; ரயில் நிலைய ஊழியரைத் தாக்கியதாக குற்றச்சாட்டு

By SG Balan  |  First Published Mar 1, 2023, 9:46 AM IST

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் துப்பரவுத் தொழிலாளரைத் தாக்கியதற்காக தமிழகத்தைச் சேர்ந்தவர் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


சிட்னி ரயில் நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளியை கத்தியால் குத்தியதாகக் கூறி, தமிழர் ஒருவர் ஆஸ்திரேலிய காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் பிரிட்ஜிங் விசாவில் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அகமது சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் உள்ள துப்புரவுப் பணியாளரை தாக்கியதாகவும் இதனால் கைது செய்யப்பட்ட அவர் காவல் நிலையத்தில் வைத்து போலீசாரையும் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது காவல்துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டபோது குண்டு அகமதுவின் மார்பில் பாய்ந்துவிட்டதாவும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Tap to resize

Latest Videos

Italy shipwreck: இத்தாலி கடற்பகுதியில் படகு கவிழ்ந்து குறைந்து 59 அகதிகள் பலி

ஆஸ்திரேலிய காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது (32) என சிட்னியில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கூறியுள்ளது. "இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கவலை அளிப்பதாகவும் உள்ளது. நியூ சவுத் வேல்ஸ் வெளியுறவுத்துறை அலுவலகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” என்று என இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட அகமது இதற்கு முன் சில முறை காவல்துறையினருடன் தொடர்பில் இருந்திருக்கிறார் என்றும் அவை எதுவும் குற்றச் செயல்கள் தொடர்பானவை என்றும் தெரிகிறது.

இதனிடையே அகமதுவால் தாக்கப்பட்ட துப்பரவுப் பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இருவருக்கும் இதற்கு முன் எந்த தொடர்பும் கொண்டவர்கள் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவைப் போலவே இன்னொரு நாட்டிலும் டிக்டாக் செயலிக்கு தடை!

click me!