சீனாவில் மரணத்தண்டனை கைதிகள் உயிருடன் இருக்கும் போதே, அவர்களுடைய இதயங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கொடூரமாக கொல்லப்படுவதாக ஆஸ்திரேலியா பல்கலைக்கழக நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
சீனாவில் மரணத்தண்டனை கைதிகள் உயிருடன் இருக்கும் போதே, அவர்களுடைய இதயங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கொடூரமாக கொல்லப்படுவதாக ஆஸ்திரேலியா பல்கலைக்கழக நடத்திய ஆய்வில் தெரியவந்தது. ஆஸ்திரேலியாவின் ஒரு பல்கலைக்கழக அமைப்பு நடத்திய ஆய்வில், சீனாவில் மரணதண்டனை கைதிகளின் இதயங்கள், அவர்கள் உயிருரோடு இருக்கும்போது கொடூரமாக வெட்டி எடுக்கப்பட்டு கொல்லப்படுவதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. மேலும் சீனாவில் சுமார் 56 மருத்துவமனைகளில் கைதிகள் உயிரோடு இருக்கும் போது அவர்களின் இதயம் வெட்டி எடுக்கப்படுவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகள், உயிருடன் இருக்கும்போதே அவர்களின் இதயத்தை மருத்துவர்கள் மூலம் வெட்டி எடுக்கப்படுகிறது. கைதிகள் மரணங்கள் குறித்த காரணங்களாக இறப்பு சான்றிதழில் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் ரகசியமாக நடக்கும் மனித உறுப்புகள் வர்த்தகம் தொடர்பாக இதுவரை வெளிவராத முக்கிய ஆவணங்கள், இந்த ஆய்வில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் நீதித்துறை சார்பாக மருத்துவர்களே, கைதிகளின் இதயத்தை வெட்டி நீக்கி மரணத் தண்டனை நிறைவேற்றும் கொடூரம் சீனாவில் நடந்தேறுவதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.சீனாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு பதிலாக, உயிருடன் இருக்கும் போதே உடல் உறுப்புகளை நீக்கம் செய்து கைதிகளுக்கு மருத்துவர்களே மரண தண்டனையை நிறைவேற்றுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சிறைகளில் மரண தண்டைக்கு காத்திருக்கும் கைதிகளுக்கு மூளைச்சாவுக்கு முன்னர், உயிருடன் இருக்கும் போதே , அவர்களுடைய இதயம் மருத்துவர் மூல வெட்டி எடுக்கப்படுகிறது. மேலும் உறுப்பு தானம் பெறுபவர்களுக்கு வெட்டி எடுக்கப்பட்ட இதயங்கள் அனுப்பப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.அதன்பிறகு, இதயம் தானம் செய்யப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றாமல் அவர்கள் உயிருடன் இருக்கும்போது உடல் உறுப்புகளை அகற்றி மருத்துவர்கள் கைதிகளை கொல்வதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த ஆய்வு, 1980 மற்றும் 2020 க்கு இடையில் அதிகாரப்பூர்வ சீன தரவுத்தளங்களிலிருந்து 124,770 மருத்துவ ஆவணங்களை ஆராய்ந்து, பகுப்பாய்வு செய்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனா முழுவதும் 300க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களை உள்ளடக்கிய 56 மருத்துவமனைகளில் 71 சந்தேகத்திற்கிடமான இதயத்தை அகற்றும் மரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு அறிக்கையை சீன அரசு மறுத்துள்ளது. ஆனால் 30 வருடங்களுக்கு மேலாக இந்த சம்பவம் நடந்தேறி வருவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கிட்னி, கல்லீரல் உள்ளிட மனித உறுப்புகளும் வெட்டி எடுக்கப்பட்டு ரகசிய வர்த்தகம் முறையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.