
டொராண்டோவில் காலிஸ்தான் சார்பு பேரணிக்கு எதிராக இந்திய ஆதரவாளர்களும் தேசியக் கொடியுடன் அதிக அளவில் கூடியதால் ஒரே இடத்தில் கூடினர். இதனால் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அறிவித்திருந்த காலிஸ்தான் சுதந்திரப் பேரணி தோல்வியில் முடிந்துள்ளது.
கனடா நாட்டின் டொராண்டோ நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே இன்று காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்கள் சிலர் கூடினர். அவர்களுக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவான சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் கூடி, இந்திய தேசியக் கொடியை ஏந்தி "பாரத் மாதா கி ஜெய்", "வந்தே மாதரம்", "இந்தியா வாழ்க" போன்ற் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் பற்றி சர்ச்சை கருத்து... திக்விஜய் சிங் மீது வழக்குப்பதிவு
காலிஸ்தான் ஆதரவாளர்கள், கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் போஸ்டர்களை ஏந்தி இருந்தனர்.
இந்த மாத தொடக்கத்தில், வெளியான 'காலிஸ்தான் சுதந்திரப் பேரணி' குறித்த போஸ்டரில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கு ஒட்டாவா தூதரக அதிகாரி சஞ்சய் குமார் வர்மா, டொராண்டோ தூரக அதிகாரி அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரும் தான் காரணம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு ஒரு மாதம் முன்பாக, ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் 39வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் ஆடைகளில் இரத்தம் தோய்ந்திருக்கும் படத்துடன் மற்றும் "ஸ்ரீ தர்பார் சாஹிப் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்குவோம்" என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டரை பரவ விட்டனர்.
இச்சூழலில் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உள்ள கனடா நாட்டின் தூதரை வரவழைத்து, கனடாவில் காலிஸ்தான் ஆதரவு சக்திகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ம.பி.யில் இளைஞரை காரில் கடத்தி சரமாரியாகத் தாக்கி உள்ளங்காலை நக்க வைத்த கொடுமை!