அந்த பை தனது தாய்க்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறி, சுமார் 3400 சிங்கப்பூர் டாலருக்கு அதைப் பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார் அந்த ஆசாமி.
பொதுவாக ஆன்லைனில் ஒரு பொருளை வாங்கும் பொழுது மக்கள் ஏமாற்றப்படுவதை நாம் பலமுறை கேட்டறிந்திருப்போம். ஆனால் சிங்கப்பூரில் தன்னுடைய விலை உயர்ந்த லூயி விட்டான் கைப்பையை இணையத்தில் விற்க சென்ற பெண்ணும் பெரிய மோசடியில் சிக்கியது தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 வயது நிரம்பிய சிங்கப்பூர் பெண் ஒருவர் தன்னிடம் இருந்த லூயி விட்டான் கைப்பையை இணையத்தில் விற்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அதை வாங்க விருப்பம் தெரிவித்து தனது இமெயில் முகவரியையும் அனுப்பியுள்ளார் ஒரு ஆசாமி.
இந்த பெண்ணும் தன்னுடைய பையின் சில புகைப்படங்களை அவருக்கு இமெயிலில் அனுப்ப, இது தனது தாய்க்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறி, சுமார் 3400 சிங்கப்பூர் டாலருக்கு அதைப் பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார் அந்த நபர்.
இனி பேனா, பேப்பர் தேவையில்லை.. எலக்ட்ரானிக் தேர்வுகளை நோக்கி முன்னேறும் சிங்கப்பூர்..
மேலும் இந்த பையை அந்த பெண் விற்ற அந்த அப்பிளிகேஷனில், பணத்தை அவருக்கு செலுத்தி உள்ளதாக கூறி அதில் உள்ள லிங் மூலம் பணம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூற அவரும் அவ்வாறே செய்ய, பணம் பெற்றது போன்ற ஆச்சு அசலான ஒரு மெசேஜ் அவருக்கு வந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் 9900 சிங்கப்பூர் டாலர்கள் வேறு ஒரு கணக்குக்கு சென்றுள்ளது, இதை கண்ட அந்த பெண் அதிர்ந்து போயுள்ளார்.
மேற்குறிய அந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சத்து 5000 ரூபாய், உடனே அந்த பெண் வங்கிக்கு தொடர்புகொண்டு பேச, சில தினங்கள் கழித்து மொத்த தொகையும் அவருக்கு திரும்ப கிடைத்துள்ளது. இது உண்மையில் தனக்கு ஒரு சிறந்த பாடம் என்று கூறி பிறரையும் அலெர்ட் செய்துள்ளார் அந்த பெண்.
ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத பேய் மழை; அடித்துச் செல்லப்படும் கார்கள்!!