
இஸ்ரேலில் நடந்த சாலை விபத்தில் விபத்தில் கேரள நர்சு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோட்டயம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த விஷ்ணுவின் மனைவி சரண்யா பிரசன்னன் (34). இவர் இஸ்ரேலில் வீட்டு செவிலியராக இருந்தார்.
கேரள செவிலியர் சாலை விபத்தில் பலி
கடந்த செவ்வாய்க்கிழமை சரண்யா ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. சாலை விபத்து எப்படி ஏற்பட்டது? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. பலியான சரண்யாவுக்கு எம்.வி. விஜயல், எம்.வி. விஷ்ணா. குறிச்சி கல்லுங்கல் பிரசன்னன் ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்தினர் சோகம்
சரண்யா பிரசன்னன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவி செய்யும்படி மத்திய, மாநில அரசுகளை அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். சரண்யா பிரசன்னன் உயிரிழந்துள்ளது சங்கனாச்சேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.