கருணாநிதி விரைவில் அரசியல் களத்துக்கு திரும்புவார் – புதுவை முதல்வர் நாராயணசாமி அதிரடி பேட்டி

 
Published : Dec 04, 2016, 05:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
கருணாநிதி விரைவில் அரசியல் களத்துக்கு திரும்புவார் – புதுவை முதல்வர் நாராயணசாமி அதிரடி பேட்டி

சுருக்கம்

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து அரசியல் களத்துக்கு திரும்புவார் என புதுவை முதல்வர் நாராயணசாமி அதிரடியாக பேட்டியளித்தார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது மகள் கனிமொழி எம்.பி.யிடம் விசாரித்தார்.
கருணாநிதியின் சிறப்பு மருத்துவர் கோபாலையும் சந்தித்து விசாரித்தார். அப்போது ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: -

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை பற்றி கனிமொழியிடம் கேட்டறிந்தேன். அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். கருணாநிதி அன்றாடம் அரசியல் நிகழ்வில் இருக்க கூடியவர். அவர் பூரண உடல் நலம் பெற்று அரசியல் பணிக்கு விரைவில் திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவரை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் , நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம் நலம் விசாரித்தனர்.

அப்போது, திமுக முதண்மை செயலர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதிமாறன், அ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!
அமெரிக்காவை விட்டு வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு ரூ.3 லட்சம்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு!