பிடல் கேஸ்ட்ரோவின் இறுதி ஊர்வலம் - லட்சக்கணக்காக மக்கள் கண்ணீர் அஞ்சலி

First Published Dec 4, 2016, 4:49 PM IST
Highlights


கியூபாவின் மறைந்த முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவின் இறுதி ஊர்வலம் முடிந்து, அனைத்து சடங்குகள் இன்று நடைபெறுகிறது.

கேஸ்ட்ரோவின் அஸ்தி பொதுமக்கள் அஞ்சலிக்காக கடந்த 3 நாட்களாக நாடு மழுவதும் எடுத்து செல்லப்பட்டது. கொண்டு செல்லப்பட்ட அவரது அஸ்திக்கு லட்சக்கணக்காக மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து கேஸ்ட்ரோவின் இறுதி சடங்குகள் சாண்டியாகோடி கியூபாவில் நடைபெறுகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது அஸ்திக்கு கியூபா மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பொலிவிய அதிபர், நிகுர்ஹர்டா அதிபர் உள்ளிட்டோர் இறுதி சடங்கில் பங்கேற்றுள்ளனர். கியூபாவை கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சி செய்த கேஸ்ட்ரோ, பாடிஸ்டா அரசு எதிராக புரட்சியை முதல் முறையாக தொடங்கிய இடம் சாண்டியாகோ டி கியூபா என்பது குறிப்பிடத்தக்கது.

click me!