ஃபேஸ் புக்கில் லைவ் செய்தபடி 160 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய வாலிபர் .. லாரிமீது மோதி படுகாயம்

 
Published : Dec 03, 2016, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
ஃபேஸ் புக்கில் லைவ் செய்தபடி 160 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய வாலிபர் .. லாரிமீது மோதி படுகாயம்

சுருக்கம்

அமெரிக்காவில் பேஸ்புக்கில் லைவ் செய்தபடி 160 கி.மீ வேகத்தில் காரோட்டி வந்த வாலிபர் லாரிமீது மோதி படுகாயம் அடைந்தார். இதனால் பெரும் விபத்து ஏற்பட்டது. கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் அந்த வாலிபர் படுகாயமடைந்தார்.

ரோட் ஐலன்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஒனாசி ஒலியோ ரோஜாஸ் (20). இவர் புராவிடன்ஸ் என்ற நகரில் நெடுஞ்சாலையில் அதி வேகமாக காரை ஓட்டியபடி வந்தார். மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டியுள்ளார். அப்போது பேஸ்புக்கிலும் அதை லைவ் செய்துள்ளார்.

சாலையில் அதி வேகமாக, விதிமுறைகளுக்குப் புறம்பாக தாறுமாறாக ஓட்டிச் சென்ற அவர்  வேகமாக மோதியதில் கார் கட்டுப்பாட்டை இழந்தது. கார் படு வேகமாக போய் குப்பை லாரி மீதும், கான்க்ரீட் தடுப்பிலும் மோதி விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் ஒனாசி படுகாயமடைந்தார்.

மீட்புப் படையினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டனர். அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. காரிலிருந்து மீட்கப்பட்ட ஒனாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரை ஒனாசி படு வேகமாக ஓட்டியபடி லைவ் செய்த வீடியோ அவரது பேஸ்புக் பக்கத்தில் உள்ளது. இது தற்போது வைரல் ஆகியுள்ளது. இந்த விபத்தில் வேறு யாருக்கும் எந்த  காயமும் ஏற்படவில்லை

PREV
click me!

Recommended Stories

வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!
அமெரிக்காவை விட்டு வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு ரூ.3 லட்சம்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு!