உலகப் போர் அபாயம்... திருப்பி அடிச்சா தாங்க மாட்டிங்க... ரஷ்யாவை எச்சரிக்கும் பைடன்!!

By Narendran S  |  First Published Feb 13, 2022, 7:18 PM IST

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு விடுதலை பெற்று தனி நாடான உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்ரமித்தது. உக்ரைனை நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் சேர்க்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்தாண்டு உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்தது. இதனால், ரஷ்யா – உக்ரைன் எல்லையில் அதிகரித்து வந்த போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை கண்டிராத பொருளாதார தடைகளை ரஷ்யா பார்க்க நேரிடும். ரஷ்யாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள் கூட்டாளிகள் தயாராக உள்ளனர். உக்ரைனை தாக்கினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும உறுதியான பதிலடி கொடுக்கும் என்றும், இதனால் ரஷ்யா மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் பைடன் எச்சரித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

click me!