ஜப்பானிய மீன்கள் மற்றும் பிற கடல் உணவுகள் பாதுகாப்பானவையே என மலேசிய அரசு அறிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் புகுஷிமா (Fukushima) அணுவுலையிலிருந்து கதிரியக்க கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு நாடுகள் அக்கறை தெரிவித்திருந்தன. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் ஜப்பானிய கடல் உணவுகளை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டு கடல் உணவுகள் உள்ளிட்ட இதர உணவு வகைகளை இறக்குமதி செய்ய தடை இல்லை என்று மலேசிய நாட்டு வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மலேசியா உணவு பாதுகாப்புக்கு சுகாதார அமைச்சகம் முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், கடல் உணவுப் பொருட்களில் கதிர்வீச்சுப் பாதிப்பு உள்ளதா என்பதை, எப்போதும் பரிசோதிக்கப்படுவதாக மலேசிய உணவு பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Singapore News | இ-சிகரெட் பிடியில் சீரழியும் மாணவர்கள்! கவலையில் சிங்கப்பூர் கல்வித்துறை!
இதனிடையே, ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் கடல் உணவுப் பொருட்கள் மற்றும் மீன்கள் உண்பதற்குப் பாதுகாப்பானவையே என மலேசிய உணவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பையொட்டி, ஜப்பான் நாட்டு வேளாண், வன மற்றும் மீன்பிடி அமைச்சகத்துடன் மலேசியா நாட்டு உணவுப் பாதுகாப்புதுறை அமைச்சக பிரதிநிதிகள் இருதரப்பு சந்திப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்! செப் 30 முதல் தொடக்கம்!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D