சிங்கப்பூரில் பரபரப்பு.. கல்யாண விருந்தில் விபரீதம்.. மணமகள் உள்பட 30 பேருக்கு பாதிப்பு - SFA தீவிர விசாரணை!

By Ansgar R  |  First Published Oct 5, 2023, 4:14 PM IST

Singapore : சிங்கப்பூர் அரசு, பல கட்டுப்பாடுகளை மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்கும் ஒரு அரசாக திகழ்ந்து வருகின்றது. ஆசிய நாடுகளில் இன்றளவும், மரண தண்டனையை கடைபிடித்து வெகு சில கண்டிப்பான அரசுகளில் சிங்கப்பூரும் ஒன்று.


அந்த வகையில் சிங்கப்பூர் சுகாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் ஒரு பரபரப்பு சம்பவம் அங்கு நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சிங்கப்பூரின் செயின்ட் ரெஜிஸ்ஸில் நடந்த ஒரு திருமண விழாவில் பரிமாறப்பட்ட மதிய உணவு விருந்தில், உணவை உட்கொண்ட 30 பேர் Food Poisoning மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

உடன்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) வெளியிட்ட அறிக்கையில், அந்த குறிப்பிட்ட திருமண விருந்தில் கலந்து கொண்ட பிறகு, மணமகள் உள்பட 30 பேர் Food Poisoning ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஒரு கிராமமே ஒரு குழந்தையின் 1 வயது பிறந்த நாளை கொண்டாடுகிறது... ஏன் தெரியுமா? 

மேலும் இந்த சம்பவம் குறித்து தற்போது சுகாதார அமைச்சகம் விசாரணை நடத்தி வருவதாக SFA மேலும் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற அந்த திருமண மதிய உணவு விருந்தைத் தொடர்ந்து விருந்தினர்கள் நோய்வாய்ப்பட்டதாக வந்த செய்திகள் குறித்து, தங்கள் மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக St. Regis ஹோட்டலின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை நடந்து வருகின்றது. விசாரணைகளுக்கு தங்கள் ஹோட்டல் அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருவதாகவும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார். செயின்ட் ரெஜிஸ் சுகாதாரம் மற்றும் தூய்மையை "மிகவும் தீவிரமாக" பாதுகாக்கிறது என்றும். அதன் விருந்தினர்களின் நல்வாழ்வு எப்போதும் அதன் "முதன்மை முன்னுரிமை" என்றும் அவர் கூறினார்.

"நுரையீரல் மீன்" பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இந்த மீன் உயிர்வாழ தண்ணீர் தேவை இல்லை; காற்று மட்டும் போதும்!

click me!