"நுரையீரல் மீன்" பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இந்த மீன் உயிர்வாழ தண்ணீர் தேவை இல்லை; காற்று மட்டும் போதும்!

By Kalai Selvi  |  First Published Oct 5, 2023, 4:02 PM IST

பெரும்பாலான மீன்கள் தண்ணீரின்றி வாழ முடியாது என்ற நிலையில், அரிய வகை மீன் ஒன்று தற்போது சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த மீனின் அற்புத அம்சத்தைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க..


மீன்கள் வாழ்வதற்கு நீர் அவசியம் என்று பொதுவாக அறிவியல் கூறுகிறது. மீன் உயிர் வாழ்வதற்கு தண்ணீரை விட வேறு எதுவும் முக்கியமில்லை. ஆனால், அறிவியலால் தெளிவான பதில் சொல்ல முடியாத பல விஷயங்கள் பூமியில் உள்ளன. எல்லாம் பிழைப்புக்காகத்தான். பெரும்பாலான மீன்கள் தண்ணீரின்றி வாழ முடியாது என்ற நிலையில், அரிய வகை மீன் ஒன்று தற்போது சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மீனின் மிக அற்புதமான அம்சம் என்னவென்றால், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல மாதங்கள் வாழ முடியும். இந்த அரிய மீன் ஆப்பிரிக்க "நுரையீரல் மீன்" ஆகும். 

ஆப்பிரிக்க நுரையீரல் மீன் எந்த உணவும் இல்லாமல், அதாவது தண்ணீர் இல்லாமல், நீண்ட காலம் வாழக்கூடியது. புதிய நீர் சூழல்கள் கிடைக்கும் போது மட்டுமே இந்த மீன்கள் நீண்ட உறக்கநிலையிலிருந்து எழுகின்றன. Views Addict என்ற இன்ஸ்டாகிராம் பயனர் நுரையீரல் மீனின் வீடியோவை Instagram இல் பகிர்ந்துள்ளார். நுரையீரல் மீன்கள் வறண்ட சேற்றில் மாதங்கள் அல்லது வருடங்கள் கூட செயலற்ற நிலையில் இருக்கும் என்றும், உயிர்வாழ தண்ணீர் தேவையில்லை என்றும் வீடியோவுடன் கூடிய குறிப்பு கூறுகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: ஒரு கிராமமே ஒரு குழந்தையின் 1 வயது பிறந்த நாளை கொண்டாடுகிறது... ஏன் தெரியுமா?

வீடியோவைப் பகிர்ந்த Viewsaddict, வீடியோவில் காணப்படும் மீன்கள் சக்கர்மவுத் கேட்ஃபிஷ் மற்றும் காமன் ப்ளெகோ என்று அழைக்கப்படுகின்றன என்று குறிப்பிடுகிறார். செயலற்ற நிலைக்குச் செல்லக்கூடிய அரிய வகை மீன்களில் இதுவும் ஒன்று. தண்ணீரின்றி செயலற்ற நிலையில் இருக்கும் மீன்களின் இந்த திறன் மழை வரும் வரை பல மாதங்கள் உலர்ந்த, கடினமான சேற்றில் வாழ உதவுகிறது என்று குறிப்பு கூறுகிறது. 

இதையும் படிங்க:  ஆபீஸ் பார்ட்டியில் நடத்தப்பட்ட போட்டி.. 1 லிட்டர் சாராயத்தை குடித்த நபருக்கு நேர்ந்த விபரீதம் - அதிர்ச்சி !!

ஆப்பிரிக்க நுரையீரல் மீன் நான்கு ஆண்டுகள் வரை தண்ணீர் இல்லாமல் உயிர்வாழும் என்று குறிப்பு கூறுகிறது. இந்த வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த காணொளியில் மீனின் வாலின் ஒரு பகுதி தூங்கியதையும் காணலாம். மேலும் இந்த வீடியோவை ஏற்கனவே ஆறு லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!