விடுவிக்கப்பட்ட இஸ்ரேல் சிறுவன்: குடும்பத்தை கண்டதும் துள்ளிக் குதித்து ஓடிய நெகிழ்ச்சி!

By Manikanda Prabu  |  First Published Nov 26, 2023, 10:20 AM IST

ஹமாஸ் அமைப்பால் பிணைய கைதியாக சிறைப்பிடிக்கப்பட்ட சிறுவன் விடுக்கப்பட்டதும் தனது குடும்பத்தை கண்டு துள்ளிக் குதித்து ஓடிய காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 


இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் தரப்பில் 1300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது.

முன்னதாக, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது முதல் தாக்குதல் நடத்திய போது இஸ்ரேலிய மக்கள் பலரை பிணைய கைதிகளாக பிடித்துச் சென்றனர். சுமார் 240 பேர் ஹமாஸிடம் பிணையக் கைதிகளாக சிக்கியுள்ளதாக தெரிகிறது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், கத்தார் மற்றும் எகிப்தின் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, நான்கு நாள் ஒப்பந்த அடிப்படையில், ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பொதுமக்கள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேலிய இராணுவத்திற்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவிற்கும் இடையில் நடந்து வரும் துப்பாக்கிச் சண்டைக்கு மத்தியில், இஸ்ரேலிய பிணையக்கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Schneider Medical Center வெளியிட்ட காணொளயில், பிணையக் கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு ஏழு வாரங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட சிறுவன், தனது குடும்பத்தை நோக்கி ஓடும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நான்கு நாட்கள் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு பின், முதற்கட்டமாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 240 பிணையக்கைதிகளில் 13 இஸ்ரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர். ஒரு தனி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 10 தாய்லாந்து பிரஜைகள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் பிரஜை உட்பட 11 வெளிநாட்டு பிரஜைகளும் ஹமாஸ் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேலிய ஊடக அறிக்கைகளின்படி, 13 இஸ்ரேலியர்களை எகிப்துக்கு கொண்டு செல்வதற்காக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதயத்தை உருக்கும் காணொளி! எப்போதுமே தனிமை.. பாசத்துக்காக ஏங்கும் 4 வயது கொரிய சிறுவன்..!

அதேபோல், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கத்தார் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் கீழ், 150 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலைக்கு ஈடாக மொத்தம் 50 பிணையக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். அவர்களில் சிலர் மீது ஆயுதக் குற்றச்சாட்டுகள் மற்றும் வன்முறைக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இஸ்ரேலிய ராணுவம் மற்றும் ஹமாஸ், காசாவில் உள்ள மற்ற ஆயுதப் பிரிவுகளுக்கு இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான ஒப்பந்தம், போரினால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு உயிர்காக்கும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை சீராக வழங்குவதையும் உள்ளடக்கியது.

click me!