மாணவரைத் தாக்கியதாக லீனா பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதான பெஞ்சமின் டோட்ஜ் காலிங்ஸ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு, பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வரும் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டதை அடுத்து, கோமா நிலைக்குச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நவம்பர் 5ஆம் தேதி தாஸ்மேனியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க மாணவருக்கு தாக்குதலில் அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தலையில் பலத்த அடி பட்டதால் சிக்கலான மூளை அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
undefined
மாணவரைத் தாக்கியதாக லீனா பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதான பெஞ்சமின் டோட்ஜ் காலிங்ஸ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு, பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
15,000 காலிப் பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாவது எப்போது?
இந்த வழக்கில் காலிங்ஸ் மீது கிரிமினல் தாக்குதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆஸி. நாட்டுச் சட்டப்படி, அவருக்கு அதிகபட்சமாக 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது.
தாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மாணவருக்குத் தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மாணவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் பென் வைல்ட் கூறியுள்ளார்.
Deepfake ஆபாசத்தைக் கட்டுப்படுத்த பேஸ்புக், யூடியூப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D