
அந்த லண்டன் நாட்டு விசா அலுவலகத்தில் மக்கள் அனைவரும் தங்கள் ஆவணங்களுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது. ஜெர்ரியின் அந்த விசா மையத்தின் டிவியில் உள்ள பெறிய திரையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த அலுவலகத்தில் இருந்து கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தற்பொழுது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில் மக்கள் கராச்சியில் உள்ள அந்த விசா அலுவலகத்தில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் பொழுது திடீரென அங்கிருந்த தொலைக்காட்சி ஒன்றில் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகி உள்ளது. அந்த டிவியில் என்ன ஓடுகிறது என்பதை காட்ட சிசிடிவி காட்சிகள் ஜூம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் அசவுகரியத்தை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக செயல்பட்ட விசா அலுவலக அதிகாரி ஒருவர், சட்டென்று அந்த டிவியை ஆப் செய்துள்ளார். தற்பொழுது இந்த தவறு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் பாட்னா ரயில் நிலையத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் நடந்த அந்த சம்பவத்தில், ஆபாச திரைப்படங்களில் நடிக்கும் கேந்திரா லிஸ்ட் என்பவருடைய வீடியோ ஒன்று அந்த பாட்னா ரயில் நிலையத்தில் இருந்த டிவி திரைகளில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.