இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கிறார். இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் பெஞ்சமின் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
சீன நாட்டில் உருவான கொடூர கொரோனா வைரஸ் அங்கு 3,300 உயிர்களை பறித்து தற்போது கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் உலகின் பிற நாடுகளில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா என உலகின் 200 நாடுகளுக்கு பிறவி 7 லட்சத்திற்கும் அதிகமான மக்களை தாக்கி 37 ஆயிரத்து 914 உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க நீண்டகாலம் எடுக்கக்கூடும் என்கிற நிலையில் அதன் பாதிப்பில் இருந்து மீள வழி தெரியாமல் ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்படாததால் கொரோனா வைரஸ் அங்கு தனது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவரையில் உலக தலைவர்களில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பாக ஸ்பெயின் இளவரசி மரிய தெரசா கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மரணமடைந்தார்.
இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் பிரதமருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கிறார். இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் பெஞ்சமின் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். தனிமையில் இருந்தவாறே நாட்டின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் இதுவரை 4347 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் 16 பேர் மரணம் மரணமடைந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.