Singapore : சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (SRC) இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் நடைபெற்று வரும் போர் நிவாரண முயற்சிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய சுமார் 1,50,000 அமெரிக்க டாலர்களை வழங்க திட்டமிட்டுள்ளது (சுமார் 2,05,410 சிங்கப்பூர் டாலர்கள்).
இந்த தொகை செஞ்சிலுவைச் செஞ்சிலுவை இயக்கத்தின் பங்காளர்களுக்குச் செல்லும், இதில் பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி (PRCS) மற்றும் இஸ்ரேலில் உள்ள மேகன் டேவிட் ஆடோம் (MDA) ஆகியவை அடங்கும். PRCS மற்றும் MDA இரண்டும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அக்டோபர் 16, 2023 முதல் ஜனவரி 31, 2024 வரை பொது நிதி திரட்டும் முறையீட்டையும் SRC (Singapore Red Cross) தொடங்கியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, அக்டோபர் 7 முதல் "குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ள" இஸ்ரேல் மற்றும் காசா பகுதியில் நடந்து வரும் போர் காரணமாக சுமார் 4,000க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன SRC தெரிவித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கூடுதலாக, இந்த போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும், மற்றும் காசாவில் இருந்து 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. காசா பகுதியில் தொடர்ந்து பதட்ட நிலை தொடர்வதால், அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், அப்பகுதியில் மனிதாபிமான உதவியின் தேவை அதிகரிக்கும் என்றும் SRC தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து உதவ நினைப்பவர்கள், அவர்களுடைய முகநூல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் மூலம் உதவலாம் என்றும் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.