
இஸ்ரேல் மீது ஹமாஸ் தொடங்கிய எல்லை தாண்டிய தாக்குதல்கள் ஒரு பேரழிவுக்குத் வழிவகுத்துள்ளது. ஹமாஸ் காசாவின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தியபோது பணயக் கைதிகளாகக் கடத்திச் சென்றவர்கள் எண்ணிக்கை 199 என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
ஏற்கெனவே ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளின் எண்ணிக்கை 155 என்று கூறியிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை இஸ்ரேல் உயர்த்தியுள்ளது. அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி ஒரு ஊடக சந்திப்பில் இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.
ஷாக் கொடுத்த ஷெரிகா... 26 வயதில் மரணம்... உலக அழகி போட்டியில் கலக்கியவருக்கு இப்படி ஒரு வியாதியா!
இந்நிலையில் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது முப்படைத் தாக்குதல்களை நடத்த இஸ்ரேலிய ராணுவம் தயாராகி வருகிறது. அதற்கு முன் காசாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஞாயிறு அன்று மூன்று மணிநேரத்தில் பாதுகாப்பான தெற்கு காசா பகுதிக்குச் சென்றுவிடுமாறு அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில் இதுகுறித்து விவாதிக்க சவுதி அரேபியாவில் ஒரு ‘அசாதாரணமான அவசர கூட்டத்திற்கு’ இஸ்லாமிய நாடுகளின் உயர்மட்ட குழு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தை சவுதி அரேபியா கூட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் காசாவில் இருக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கு குடிநீர், மின்சாரம், உணவு போன்ற அத்தியாவசிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் காசாவின் நடத்திருப்பது அனைத்தும் ஹமாஸ் பயங்கரவாதிகளால் நடந்தவை அதற்கு பாலஸ்தீன மக்கள் பொறுப்பு அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் போர் விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் பிடன் கூறியுள்ளார்.
இச்சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் குழுவினரை முற்றிலும் அழித்தொழிக்கும் வரை ஓயாது என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.