Israel Election 2022:இஸ்ரேலின் அடுத்த பிரதமராகிறார பெஞ்சமின் நெதன்யாகு: 90 சதவீத வாக்குகள் எண்ணிக்கையில் உறுதி

By Pothy Raj  |  First Published Nov 3, 2022, 4:58 PM IST

இஸ்ரேலின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 90 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், வலதுசாரியான லிக்குட் கட்சியின் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த பிரதமராக வர உள்ளார்.


இஸ்ரேலின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 90 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், வலதுசாரியான லிக்குட் கட்சியின் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த பிரதமராக வர உள்ளார்.

90 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், இதில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் லிக்குட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 65 இடங்களுக்கும் அதிகமாக லிக்குட் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

Tap to resize

Latest Videos

ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வேலையிலிருந்து நீக்கம்: எலான் மஸ்க் திட்டம்

இதையடுத்து, இஸ்ரேலின் அடுத்த பிரதமராக 73வயதான பெஞ்சமின் நெதன்யாகு தேர்வாகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணிக் கட்சிகள் உள்பட 65 இடங்களில் வென்றுள்ளன.

இதில் லிக்குட் கட்சி 32 இடங்களிலும், யாஷ் அதித் கட்சி 24, ஜியோனிஷம் மதவாதக் கட்சி 14 இடங்களிலும்,  தேசிய ஒற்றுமைக் கட்சி 12 இடங்களிலும், ஷாஹஸ் 11 இடங்களிலும், ஒருங்கிணைந்த டோரா ஜூடிஷிம் கட்சி 8இடங்களிலும் வென்றுள்ளன.

டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் நாளேடு வெளியிட்ட செய்தியில் “ பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு, பெண்களுக்கான இடம் மிகவும் குறைவாக இருக்கும். தற்போதைய முடிவுகளின் அடிப்படையில் தேர்தலில் வென்ற 9 பெண் வேட்பாளர்களில் ஒருவர் கூட நெதயன்யாகு கட்சியில் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் 10 ஆண்டுகள் வரை வெளிநாட்டு பயணிகள் தங்கலாம்! புதிய சலுகை அறிவிப்பு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி நெதன்யாகு கட்சி 65 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்தது. இதில் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி, ஜியோனிஷம் கட்சி, அல்ட்ரா ஆர்த்தடாக்ஸ் கட்சி, டோரா ஜூடிஷம் கட்சிகள் அடக்கம்.

டெல்அவிவ்நகரில் கடந்த 1949ம் ஆண்டு பிறந்த பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலில் நீண்டகாலம் 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். 1996 முதல் 1999 வரையிலும், 2009 முதல் 2021 வரையிலும் பிரதமராக நெதன்யாகு இருந்தார். 

மீண்டும் ட்விட்டரில் இணைந்தாரா டொனால்ட் ட்ரம்ப்? வைரலாகும் புதிய ட்வீட்

2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் நெதன்யாகு வெற்றி பெற்று கூட்டணிக் கட்சி ஆதரவுடன் பிரதமராகினார். ஆனால், கூட்டணி கட்சிகள் ஆதரவை திடீரென விலக்கியதால், பிரதமர் பதவியிலிருந்து நெதன்யாகு விலகினார். அதன்பின் நடந்த பொதுத் தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, யாமினா கட்சி ஆட்சி அமைத்தது.

 பிரதமராக இருந்த நாப்தாலி, ஓர் ஆண்டுவரை ஆட்சியில் இருந்தார். ஆனால் கூட்டணிக் கட்சிகள் ஆதரவைவிலக்கியதைத் தொடர்ந்து நாப்தாலி ஆட்சியும் கவிழ்ந்தது. இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளில் 5வது முறையாக தேர்தலை இஸ்ரேல் சந்தித்தது. 

click me!