இந்தோனேசியாவின் உள்ள மஜலெங்காவைச் சேர்ந்த 61 வயது முதியவர் 88வது திருமணத்தை செய்ய உள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியா மேற்கு ஜாவாவை சேர்ந்த கான் என்ற விவசாயி தற்போது வரை 87 முறை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து தற்போது அவர் 88வது முறை திருமணம் செய்யவுள்ளதாக இந்தோனேசியா ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.
கான் என்ற இந்த நபருக்கு முதன்முதலில் திருமணம் நடைபெற்றபோது 14 வயது என்று கூறுகிறார்கள். அவரின் முதல் மனைவி இவரைவிட இரண்டு வயது மூத்தவர் ஆவார். தனது திருமண அனுபவங்கள் குறித்து கான் அந்த நாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது ,’முதல் மனைவியிடம் நான் சரியாக நடந்துகொள்ளாததால் அவர் இரண்டே வருடத்தில் என்னிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டார்.
இதையும் படிங்க..2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி
நான் பெண்களுக்கு நல்லது செய்யாத விஷயங்களை நானும் செய்ய விரும்புவதில்லை. பெண்களுக்கு என் மீது ஈர்ப்பு வர நான் ஆன்மிகத்தின் உதவியை நாடுகிறேன்’ என்று கூறினார். இவரை உள்ளூரில் பிளேபாய் கிங் என்று அழைக்கின்றனர்.இவருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இப்போது இவர் திருமணம் செய்யக்கூடிய பெண், இவரின் முன்னாள் மனைவி ஆவார். அவர்களுக்குள் சண்டை வந்து பிரிந்து சென்ற நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். சமூக வலைத்தளங்களில் கானுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.
இதையும் படிங்க..கேட்டது 50 இடம்! கிடைச்சது 3 மட்டும்.. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு குறைந்த இடங்களில் அனுமதி கொடுத்த காவல்துறை
இதையும் படிங்க..தத்தளிக்கும் சென்னை!! கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் - தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் விடுத்த கோரிக்கை