இஸ்ரேலின் வடக்கு நகரமான கிரியாத் ஷ்மோனாவை காலி செய்ய அந்நாட்டு ராணுவம் உத்தரவுட்டுள்ளது
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, கடந்த 7ஆம் தேதியன்று இஸ்ரேல்மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது எதிர்த் தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இதனால், போர் மூண்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
முந்தைய சண்டைகளை விட தற்போதைய தாக்குதல் இஸ்ரேலுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் முதல் நாளே 5000 ஏவுகணைகளை கொண்டு தாக்கினர். இதனை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல் உருக்குலைந்தது. எப்படியேனும் ஹமாஸை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவோடு இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை கையாண்டு வருகிறது. இதில் சிக்கி பாலஸ்தீனத்தின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஒருபுறம் தாக்குதல் நடத்தினால், மற்றொருபுறம் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் பிரச்சினை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், எல்லையில் இருக்கும் நகரங்கள் இந்த தாக்குதலின் மையப் புள்ளியாக மாறியுள்ளன. எனவே, எல்லை நகரங்களில் வாழும் மக்களை இஸ்ரேல் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகிறது.
அந்த வகையில், லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா போராளிகளுடனான மோதல் காரணமாக இஸ்ரேலின் வடக்கு நகரமான கிரியாத் ஷ்மோனாவை காலி செய்ய இஸ்ரேல் ராணுவத்தின் வடக்கு கட்டளை சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் உள்ளூர் நிர்வாகம், சுற்றுலா அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மூலம் திட்டம் நிர்வகிக்கப்படும் என ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் அதன் பலஸ்தீனியப் பிரிவுகள் பல நாட்களாக இஸ்ரேலுடன் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளன. எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதால், ஹெஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு எதிரான மனு தள்ளுபடி: மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
கண்காணிப்பு நிலைகள் உட்பட, ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புக்கு எதிராக பல தாக்குதல்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலை நோக்கி டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் போர் விமானங்கள் தாக்கி அழித்துள்ளன. இதனிடையே, இஸ்ரேலிய அதிகாரிகள் வடக்கு எல்லையில் உள்ள சமூகங்களை சீராக வெளியேற்றி வருகின்றனர்.
1975-1990 உள்நாட்டுப் போருக்குப் பிறகு நிராயுதபாணியாக்கப்பட்ட லெபனானின் ஒரே ஆயுதப் பிரிவான ஷைதி முஸ்லிம் ஹிஸ்புல்லா இயக்கம், கடைசியாக 2006 இல் இஸ்ரேலுடன் ஒரு பெரிய மோதலில் ஈடுபட்டது. அந்தப் போரில் லெபனானில் 1,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். இஸ்ரேலில் 160 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலும் ராணுவ வீரர்கள். இந்த தாக்குதல் வரலாற்றில் ஆழமான வடுவாக பதிந்துள்ளது.