
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைமை அமைப்பான ஐ.எஸ். சென்ட்ரல் கலிபேட் பிரகடனத்தின் 10 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் காஃபிர்களை படுகொலை செய்ய வேண்டும் என உலகெங்கிலும் உள்ள "ஓநாய்" குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) அமைப்பின் வேர்கள் 1999இல் ஜோர்டானிய பயங்கரவாதியான அபு முசாப் அல்-சர்காவியால் நிறுவப்பட்டது. ஆனால், 2014இல் தான் ஐ.எஸ்.ஐ.எஸ். தன்னை இஸ்லாமிய அரசு என்று பிரகடனம் செய்து அபு பக்கர் அல்-பாக்தாதியை தங்கள் கலீபாவாக அறிவித்தது.
2014ஆம் ஆண்டு ரமலான் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதற்கான “கலிபேட்” பிரகடனத்தை அறிவித்தது. இந்தப் பிரகடனத்தின் பத்து ஆண்டு நிறைவை முன்னிட்டு, சர்வதேச நாடுகளின் நுண்ணறிவுப் பிரிவினர் பாதுகாப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கருந்துளை ஆராய்ச்சியில் புதிய மைல்கல்! EHT தொலைநோக்கி பதிவுசெய்த புதிய படங்கள்!
அனைத்து நாடுகளில் இருந்தும் முஹாஜிரின் என்ற வெளிநாட்டுப் போராளிகளுக்கு அழைப்பு விடுத்து, ஐ.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஹுதைஃபா அல்-அன்சாரி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், கலிபேட் பிரகடனம் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றும் ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் வரை உலகம் முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை வலுப்படுத்தி இருப்பது பற்றியும் விவரித்துள்ளார்.
அன்சாரி தனது 41 நிமிட ஆடியோ உரையில், ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைப் புகழ்ந்து பேசியுள்ளார். "நபிகள் முன்னறிவித்தபடி இஸ்லாம் இறுதியில் உலகில் மேலோங்கும். அல்லாஹ்வின் மூலம், இந்த விஷயம் சாத்தியமாகும்" என்றும் அவர் கூறினார். பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா அவர்களின் பாதையில் இருந்து விலகிச் சென்றுவிட்டனர் என்றும் கடுமையாகச் சாடினார்.
அன்சாரிக்கு முன் அபு உமர் அல்-முஹாஜிர் ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். முஹாஜிர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக 2023 ஆகஸ்ட் மாதம் அன்சாரி செய்தித் தொடர்பாளராகப் நியமிக்கப்பட்டார். இதற்கு மேல் அன்சாரியைப் பற்றி வேறு எந்த விவரமும் வெளிவரவில்லை.
இன்ஸ்டாகிராமில் புதுசா வந்த வானிஷ் மோட்! எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சுகோங்க!