ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வாங்கியதும் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள விவகாரம் சர்வதேச அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது சரியா செயலா, அமெரிக்க சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து இந்த செய்தி அலசுகிறது
ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வாங்கியதும் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள விவகாரம் சர்வதேச அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது சரியா செயலா, அமெரிக்க சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து இந்த செய்தி அலசுகிறது
ட்விட்டர் நிர்வாகம் எலான் மஸ்க் கரங்களுக்கு மாறியதும் அதிரடியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ட்விட்டர் சிஇஓ பராக்அகர்வால் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். செலவைக் குறைக்கும்திட்டத்தில் ட்விட்டர் ஊழியர்களில் 3700 பேர் எந்த விதமான முன்அறிவிப்பும், நோட்டீஸ் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
undefined
இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களும் நீக்கம்: மார்க்கெட்டிங் டீமே காலி!
3,700 ஊழியர்கள் ஒரே நேரத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிலும் ஊழியர்களுக்கு அடுத்த வேலை தேடுவதற்கு கூட அவகாசம் இல்லை, நோட்டீஸ் இல்லை என்பது தொழிலாளர் உரிமை மீறல், மனித உரிமை மீறல் என்று ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் தரும் அமெரிக்காவில் இது நடந்தது பலருக்கு வியப்பு. அதிலும், பல்வேறு நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவில் ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் நீக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமா என்பது பலருக்கும் தெரியவில்லை. நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு எவ்வாறு இழப்பீடு கிடைக்கும் என்பது குறித்தும் தெளிவான விளக்கம் ட்விட்டர் நிர்வாகத்திடம் இருந்து இல்லை.
மசால் தோசை, பில்டர் காபியில் மயங்கிய ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர்: பெங்களூரு வித்யார்த்தி பவன் பெருமை
ட்விட்டர் நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்அஞ்சலில் அனுப்புனர் பெயரும், கையொப்பமும் இல்லை. வெறும் ட்விட்டர் என்ற வார்த்தை மட்டுமே இருந்துள்ளது ஊழியர்களுக்கு பெரும் அதிருப்தியாக இருந்தது.
இதனிடையே அமெரி்க்காவில் தொழிலாளர் சட்டத்தில் இதுபோல் ஊழியர்களை நீக்க இடம் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
அமெரிக்க சட்டம் சொல்வது என்ன?
அமெரிக்காவின் பெடரல் ஒர்கர்ஸ் அட்ஜெஸ்மென்ட்அன்ட் ரீட்ரைனிங் நோட்டிபிக்சேன்(WARN) சட்டப்படி, 100 ஊழியர்கள் அதற்கு மேல் உள்ளவர்கள் பணியாறும் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முன் 60 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். கூட்டமாக ஊழியர்களை நீக்கும்போது குறைந்தபட்சம் 500 ஊழியர்களாவது இருக்க வேண்டும், அவர்களுக்கு 30 நாட்களுக்குமுன்பே நோட்டீஸ் தர வேண்டும். அவர்களுக்கு 60 நாட்கள் ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வேலையிலிருந்து நீக்கம்: எலான் மஸ்க் திட்டம்
WARN சட்டத்தை மீறினால் தண்டனை என்ன?
WARN சட்டத்தை மீறியதாக ஒரு நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு 60 நாட்கள் ஊதியத்தை வழங்கிட வேண்டும், தினசரி 500 டாலர் அபராதமாகவும் செலுத்த வேண்டும். கலிபோர்னியா மற்றும் பல்வேறு மாகாணங்களில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது
எலான் மஸ்க், ட்விட்டர் மீது வழக்கு?
3,700 ஊழியர்களை எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கியதற்கு எதிராக எலான் மஸ்க்,ட்விட்டர் நிர்வாகத்துக்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ பெடரல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எந்தவிதமான நோட்டீஸ் இன்றியும், இழப்பீடு தொகை இன்றியும் நீக்கப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுவரை ட்விட்டர் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
கண்ணீருடன் வெளியேறும் ட்விட்டர் இந்தியா ஊழியர்கள்: எலான் மஸ்க் மெயிலுக்காக காத்திருப்பு!
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஷானன் லிஸ் ரியார்டன் தாக்கல்செய்த மனுவில், “ ட்வி்ட்டர் நிர்வாகம் WARN சட்டத்தை மீறிவிட்டது. ஊழியர்களுக்கு 2 மாத ஊதியத்தை இழப்பீடாக வழங்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்
எலான் மஸ்கின் மற்ற நிறுவனங்களும் WARN சட்டத்துக்குள் வருமா?
நிவேதா நகரில் ஸ்பார்க் பகுதியில் அமைந்துள்ள டெஸ்லா கார் நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 500 ஊழியர்கள் எந்தவிதமான முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக டெக்சாஸ் பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக லிஸ் ரியோர்டன் ஆஜராகியுள்ளார்.
ஆனால், இதற்கு பதில் அளித்துள்ள டெஸ்லா நிர்வாகம், மோசமாக பணியாற்றிய, திறமைக் குறைவான ஊழியர்களைத்தான் பணிநீக்கினோம் என விளக்கம் அளித்துள்ளது.