Iran Hijab Protest: ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு மரண தண்டனை: ஈரான் நீதிமன்றம் தீர்ப்பு

By Pothy RajFirst Published Dec 9, 2022, 2:16 PM IST
Highlights

ஈரானில் ஹிஜாப் போரட்டத்தில் ஈடுபட்டு ராணுவ வீரரைக் கொலைசெய்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரானில் ஹிஜாப் போரட்டத்தில் ஈடுபட்டு ராணுவ வீரரைக் கொலைசெய்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரானில் கடந்த 1979ம் ஆண்டு உள்நாட்டுப் புரட்சிஏற்பட்டதில் இருந்து 9 வயது சிறுமி முதல் அனைவரும் வெளியே வரும் அனைத்து பெண்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும். பெண்கள் ஹிஜாப்பை முறையாக அணிகிறார்களா என்பதைக் கண்காணிக்கவே தனியாக போலீஸாரை ஈரான் அரசு அமைத்துள்ளது. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்களுக்கு கடும் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

Blue Skin Man : ஊட்டச்சத்து கிடைக்க வேண்டிய ஆசைப்பட்டு முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

கடந்த செப்டம்பர் மாதம் குர்திஸ்தான் மாகாணத்தில் 22வயதான மாஷா அம்னி என்ற பெண் ஹிஜாப் அணியால் இருந்தார் என்பதற்காக போலீஸார் அவரை கடுமையாகத் தாக்கி கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றபோது அங்கேயே மாஷா அமினி உயிரிழந்தார்.

மாஷா அமினியின் உயிரிழப்பு ஈரானில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஈரான் அரசின் ஹிஜாப் சட்டங்களை நீக்கக் கோரி பெண்கள்  போராட்டத்தில்ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய போராட்டம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஹிஜாப் போராட்டுத்தில் இதுவரை ஏராளமான பொதுமக்கள், போலீஸார் உயிரிழந்தனர். 

இந்நிலையில் டெஹ்ரானில் உள்ள கராஜ் நகரில் கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்த  போராட்டத்தில் ராணுவ வீரர் ருஹல்லா அஜாமியான்(27) என்பவரை போராட்டக்காரர்கள் அடித்துக் கொலை செய்தனர். 

ஒட்டக சவாரியின் போது தலைக்குப்புற விழுந்த இருவர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து 16 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு டெஹ்ரான் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில், “ துணை ராணுவ வீரரை கொலை செய்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 3 குழந்தைகள் உள்ளிட்ட 11 பேருக்கு நீண்டகாலம் சிறையில் அடைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து நீதித்துறை செய்தித்தொடர்பாளர் மசூத் செதாயேசி கூறுகையில் “ நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியல்ல, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்” எனத் தெரிவித்தார்.

click me!