பனி, மணல் மற்றும் கடல் சந்திக்கும் அற்புதமான கடற்கரையின் படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் அடிக்கடி நம்மை பிரமிக்கவைக்கும் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாவது உண்டு. ஜப்பானில் உள்ள ஒரு கடற்கரையில் இருந்து சமீபத்தில் வெளிவந்த ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடற்கரை என்றால் எல்லாமே ஒன்றுதானே. இதில் என்ன சிறப்பு என்ன என்று கேட்கிறீர்கள் ? என்பது புரிகிறது.
ஜப்பானில் உள்ள இந்த கடற்கரையின் சிறப்பு என்னவென்றால், பனி, மணல் மற்றும் கடல் ஆகியவை ஒரே இடத்தில் சந்திப்பதைக் காணலாம். ரெடிட்டில் இந்த படத்தை வெளியிட்ட நபர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த படம் ஜப்பானின் மேற்கு கடற்கரையில் சானின் கைகன் ஜியோபார்க்கில் புகைப்படக் கலைஞர் ஹிசாவால் எடுக்கப்பட்டது. புகைப்படக்காரர் அதே படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதையும் படிங்க..நாங்க பொண்ணு தரவேமாட்டோம்.! இளைஞர்களின் திருமணத்தில் மண்ணை அள்ளிப்போட்ட ‘ஈக்கள்’ - இப்படியொரு கிராமமா ?
இந்த படம் இன்ஸ்டாகிராமில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளி குவித்துள்ளது. இதுகுறித்து அந்த பதிவில் கருத்து தெரிவித்த ஒருவர், நிறைய கடற்கரைகளில் பனிப்பொழிவு அரிதாகவே இருக்கும். பனி உள்ள பல கடற்கரைகள் பாறைகள் மற்றும் மணல் கடற்கரைகள் அல்ல’ என்று பதிவிட்டார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் பாராட்டை பெற்று வருகிறது.
இதையும் படிங்க..2024 மக்களவை தேர்தலில் 25 எம்பிக்கள் சீட் உறுதி.. கோவையில் அண்ணாமலை போட்ட அதிரடி சபதம் !