இந்தியா - சீனா கூட்டு ராணுவப் பயிற்சி : நவம்பர் 15-ல் தொடக்‍கம்!

Asianet News Tamil  
Published : Oct 12, 2016, 05:35 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
இந்தியா - சீனா கூட்டு ராணுவப் பயிற்சி : நவம்பர் 15-ல் தொடக்‍கம்!

சுருக்கம்

சீனா இடையிலான ராணுவ உறவை பலப்படுத்தும் விதமாக, அந்நாட்டுடன் கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா ஈடுபடவுள்ளது. 

என்.எஸ்.ஜி. எனப்படும் அணுசக்‍தி விநியோகக்‍ குழுமத்தில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்‍கட்டை போட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, ஐக்‍கிய நாடுகள் சபையில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்‍கக்‍கோரும் இந்தியாவின் நடவடிக்‍கைக்‍கும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

எனினும், சீன ராணுவத்துடனான ராணுவ உறவை இந்தியா தொடர்ந்து பலப்படுத்தும் நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்தியாவும், சீனாவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் 6-வது கட்ட கூட்டு ராணுவப் பயிற்சி, மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் வரும் நவம்பர் மாதம் 15-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!