ராயல் கரீபியன், இது உலக அளவில் பல சொகுசு கப்பல்களை இயக்கி வரும் ஒரு மிகப்பெரிய நிறுவனம். இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து, பினாங்கு புறப்பட்ட ஒரு சொகுசு கப்பலில் பயணித்துள்ளனர் ஜெகதீஷ் சாகன் மற்றும் அவரது மனைவி ரீட்டா சகானி, இந்தியர்களான இவர்கள் தங்கள் சுற்றுலாவின் ஒரு பகுதியாக அந்த கப்பலில் பயணித்துள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து, நேற்று ஜூலை 31ம் தேதி மாலை சுமார் 4:30 மணிக்கு, அந்த ராயல் கரீபியன் சொகுசு கப்பல் புறப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து செல்லும் இந்த கப்பல், சரியாக நான்கு நாள் பயணம் செய்து பினாங் சென்றடையும்.
இந்நிலையில் நேற்று மாலை ராயல் கரீபியன் சொகுசு கப்பல் தனது பயணத்தை தொடங்கிய சிறிது நேரத்தில், 70 வயதான ஜெகதீஷ் சாகன், தனது 64 வயதான மனைவி ரீட்டா சகானியை காணவில்லை என்று பதட்டத்துடன் கப்பலில் இருந்த அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஒரு பிரம்மாண்ட சொகுசு கப்பலில் ஒருவர் தொலைந்துபோன பல வாய்ப்புகள் உள்ளது, ஆகையால் அதிகாரிகள் அவரை தேடத்துவங்கியுள்ளனர்.
undefined
இந்திய வேளாண் தொழில்நுட்பத்தை மலேசியாவில் செயல்படுத்த திட்டம்! மலேசிய அமைச்சர் தகவல்!
ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கப்பலுக்குள் பல இடங்களில் தேடியும் அந்த பெண்மணி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. கப்பலில் உள்ள பாதுகாப்பு கருவிகள், கப்பலில் இருந்து ஏதோ ஒன்று கடலில் விழுந்துள்ளது என்ற அறிக்கையை கொடுத்துள்ள நிலையில் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த பதட்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இருப்பினும் இந்த தம்பதியின் 39 வயது மகன் அபூர்வ் சஹானி, தனது தாய்க்கு நீச்சல் தெரியாது என்றும், நிச்சயமாக கப்பலுக்குள் ஏதோ ஒரு அறையில் தான் அவர் இருக்கிறார் என்றும் உறுதி பட தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கப்பலில் அவர் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
70 வயதான கணவர் ஜெகதீஷ் சஹான் தான், மனைவி ரீட்டாவுடன் பயணித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கப்பல் முழுவதும் அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது, சிசிடிவி காட்சிகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. நடுக்கடலில் தனது கணவருடன் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக வயதான நபர் 127 வயதில் காலமானார்.. 2 உலகப்போர்கள், 3 பெருந்தொற்று நோய்களை பார்த்தவர்!