
இறந்து புதைக்கப்பட்ட அந்த பெண் 30 வயது உடையவர் என்றும் மற்றும் அவர் 160 சென்டிமீட்டர் உயரத்தில் இருந்ததாக காவல்துறைத் தலைவர் கம்யூன் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல்கள் அளித்துள்ளது. அந்த வீட்டில் முன்னதாக வசித்து வந்த ஒருவரின் காதலி அந்த பெண் என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
மேலும் இந்த பெண்ணின் வழக்கில் மலேசிய போலீசாரால் அடையாளம் காணப்பட்ட பிரதான சந்தேக நபர் ஒரு இந்தியப் பிரஜை என்பதுடன், கொலை விசாரணைக்காக போலீசாரால் தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களில் அவரும் ஒருவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்தேக நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய இந்திய தூதரகம் மற்றும் இந்திய போலீசாரின் உதவியை நாடியுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியத் தூதரகத்திடம் இருந்து கூடுதல் விவரங்களைப் பெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவரின்
குடும்பத்தினரைத் தொடர்புகொள்வதாகவும் அவர் கூறினார். 53 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவர் டிசம்பர் 5ஆம் திகதி போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதுடன், கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இரு வெளிநாட்டவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாற், ஏற்கனவே வாடகைக்கு விடப்பட்ட இடத்தை, மற்றொருவருக்கு வாடகைக்கு விடும் முன்னாள் அவ்வீட்டின் குளியலறையை ஆய்வு செய்துள்ளார். அப்போது தான் அங்கு தரையில் சிமெண்ட் புதிதாக பூசப்பட்டிருப்பதை கண்டுள்ளார். அது குறித்து கேட்டபோது ஏதோ சாக்கு சொல்லி உண்மையை அந்த நபர் மறைத்துள்ளார்.
கடந்த மாதம் வீட்டின் மேற்கூரையை சரிசெய்வதற்காக வீட்டு உரிமையாளர் வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அப்போது தான டிசம்பர் 3-ஆம் தேதி தண்ணீர் தொட்டியில் சிமெண்டில் மூடப்பட்ட நிலையில் ஒரு சடலம் இருப்பதைக் கண்டுபிடித்து அதிர்ந்து, அந்த பணியாளர்கள் உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தனர்.
சுமார் இரண்டு மணிநேரம் அந்த சிமெண்ட் உடைக்கப்பட்டு பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. தற்போது அந்த பெண் இந்தியர் என்றும், அவர் கொலை சம்மந்தமாக ஒரு இந்தியர் உள்ளிட்ட இருவரை தேடி வருவதாகவும் மலேசிய போலீசார் தெரிவித்துள்ளனர்.