மாலத்தீவுகள் "முழு சுதந்திரமாக" இருக்க விரும்புகிறது என்றும் ஆகையால் இந்த தீவு நாட்டில் நிலைகொண்டுள்ள இந்திய துருப்புக்களை வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறது, என்றும் மாலத்தீவில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மொஹமட் முய்ஸு கூறுகியுள்ளார்.
புது தில்லி மற்றும் பெய்ஜிங் இரண்டும் தங்கள் பிராந்தியத்தில் செல்வாக்கு பெற போட்டியிடுவதால், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில், தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் சோலி, தீவு நாட்டின் விவகாரங்களில் இந்தியா கட்டுப்பாடற்ற ஆதிக்கத்தை அனுமதிப்பதாகவும், இந்திய துருப்புக்களை அங்கு நிறுத்த அனுமதிப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மையை சரணடைந்ததாகவும் முய்ஸு குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான முய்ஸு, ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில், "இது இந்திய வெளிநாட்டு இராணுவப் பிரசன்னமாக இருக்கிறது. துருப்புக்கள் வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தனது எதிர்வினை ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
undefined
சீனப் பெண் செய்த தவறு.. சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரத் தடை - ஏன்? வெளிநாட்டு ஊழியர்களே கவனம் தேவை!
சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் புது தில்லியின் ஆதரவுடன் ரேடார் நிலையங்களையும், கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர். இந்திய போர்க்கப்பல்கள் மாலத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ரோந்து செல்ல உதவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. முய்ஸு, இந்திய அரசாங்கத்துடன் தனது இராணுவ படைகளை அகற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகள் "ஏற்கனவே மிகவும் வெற்றிகரமாக உள்ளது" என்றும் கூறினார்.
"பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நாங்கள் விரும்புகிறோம்," என்று முய்சு கூறினார், ராணுவ வீரர்களை நீக்குமாறு இந்தியாவிடம் நான் கூறுவதால், "சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டையோ தங்கள் ராணுவத் துருப்புக்களை இங்கு கொண்டு வர நான் அனுமதிக்கப் போகிறேன், என்று அர்த்தமல்ல" என்றும் அவர் தெளிவாக கூறினார்.
முய்ஸு இப்போது இந்திய துருப்புக்களை அகற்றுவதன் மூலமும் தெற்காசிய அண்டை நாடுகளுடனான பாதகமான வர்த்தக சமநிலையை நிவர்த்தி செய்வதன் மூலமும் போக்கை மாற்றுவதாக உறுதியளிக்கிறது. "நாங்கள் அனைத்து நாடுகளுடனும் உதவி, ஒத்துழைப்பை பெற விரும்புகிறோம்," என்று முய்சு கூறினார்,
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
முய்ஸு, மாலதீவுகளின் தலைநகர் மாலே நகரின் மேயராகவும், ஒரு முறை வீட்டுவசதி அமைச்சராகவும் இருந்தவர். சீனக் கடன்களை வரவேற்று, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக அதிகாரத்தில் இருந்தபோது, அதிருப்திக்கு எதிரான பரந்த அளவிலான ஒடுக்குமுறையை மேற்பார்வையிட்ட ஒரு கட்சியை வழிநடத்துகிறார் முய்ஸு. 500,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 187 தீவுகளில் பரவியிருக்கும் மாலத்தீவு நாடு, ஒரு சுற்றுலாத் தலமாகவும், காலநிலை மாற்றத்தின் முன் வரிசையில் உள்ளது.