சிங்கப்பூரில் இருந்து கம்போடியாவுக்கு பள்ளிச் சுற்றுலா சென்ற இந்திய மாணவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, வெளிநாட்டு பயண வழிகாட்டு நெறிமுறைகளை மறுஆய்வு செய்ய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த கைரா கர்மாக்கர், சிங்கப்பூர் டோவர் ரோட்டில் அமைந்துள்ள யுனைடெட் வோர்ல்டு கல்லூரியில் படித்து வந்தார். பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிச் சுற்றுலா மூலம் கம்போடியத் தலைநகர் நோம் பென்னுக்குச் சென்றபோது கடந்த ஜூன் 1ம் தேதி நடந்த சாலை விபத்து ஒன்றில் மரணமடைந்தார்.
இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், அவர் சக மாணவர்களுடன் இருந்தார் என்றும், மாணவர்களுடன் உதவிக்கோ, பாதுகாப்பிற்கோ ஆசிரியர்களோ, பெரியவர்களோ இல்லை என தெரியவந்தது. மாணவர் இறந்த அதேநாளில், காலை 3.07 மணிக்குக் கல்லூரிக்கு மாணவர் இறந்த தகவல் அளிக்கப்பட்டது. மாணவர் உடன் சென்ற சக மாணவர்கள் குறித்த விபரங்களை கேட்ட போது, அந்தக் குழுவில் எத்தனை மாணவர்கள் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்க கல்லூரி மறுத்துவிட்டது என மரணமடைந்த மாணவரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இறந்த மாணவர், கைரா கர்மாக்கர் படித்து வந்த பள்ளியான யுனைடெட் வோர்ல்டு கல்லூரி சிங்கப்பூரில் டோவர் ரோட்டிலும் மற்றொன்று தெம்பனிசிலும் என 2 வளாகங்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று இறந்த மாணவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய சிங்கப்பூர் இடையேயான உறவு போற்றத்தக்கது! - அரிசி ஏற்றுமதிக்கு சிறப்பு அனுமதி அளித்த இந்தியா!
இதனிடையே, இச்சம்பவம் குறித்து பள்ளிநிர்வாகம், வெளிப்புற விசாரணையை நடத்தத் திட்டமிடுவதாக யுனைடெட் வோர்ல்டு கல்லூரியின் தலைவர் நிக் அல்சின் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிச் செயல்முறைகளை மறுஆய்வு செய்யப்படும் என்றும், பள்ளி ஆளுநர்கள் நிர்வாகக் குழுவின் தணிக்கை குழுவிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் நிக் அல்சின் தெரிவித்தார்.
கட்டுமான பணியிடங்களில் பாதுகாப்பு விதிமீறல்! கூடுதல் அதிரடி சோதனைகளுக்கு சிங்கப்பூர் அரசு ஏற்பாடு