சிங்கப்பூரில் சமூக ஊடக தளங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை உள்ளடக்கிய மோசடிகளில் சுமார் 25க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து ஒரு அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார்கள் சிங்கப்பூர் போலீசார்.
சிங்கப்பூரில் உலவி வரும் இந்த புதிய வகை மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதலில் அவர்களது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் MoonCake விற்பனை குறித்த விளம்பரங்கள் வந்துசேரும். Mooncake என்பது சீனர்களில் விரும்பி சாப்பிடப்படும் ஒரு வகை இனிப்பு. குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த வகை உணவு அதிகம் விற்பனையாகும்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த போலியான செய்திகளை கண்டு ஏமாந்தவர்களை, மோசடிக்கும்பல் ஒரு ஆண்ட்ராய்டு பேக்கேஜ் கிட்டை (APK) பதிவிறக்க செய்யவைக்கின்றனர். அதன் பிறகு அந்த கிட்டை பதிவிறக்கம் செய்தவர்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பணம் திருப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்தனர்.
Airport : அக்டோபர் 1 ஆம் தேதி வரை.. இந்த விமான சேவை மூடல்.. விமான நிறுவனம் அறிவிப்பு !!
சிங்கப்பூரில் பலரின் பணத்திற்கு வேட்டுவைத்த இந்த புதிய மோசடியில் சிக்கி, மக்கள் குறைந்தபட்சம் S$325,000 (இந்திய மதிப்பில் சுமார் 18 கோடி) அளவிலான பணத்தை இழந்துள்ளதாக சிங்கப்பூர் போலீஸ் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் கடந்த மார்ச் மாதம் இதேபோல அறிய வகை துரியன் பழங்கள், செர்ரிகள் மற்றும் வாக்யு மாட்டிறைச்சி போன்ற பருவகால உணவுப் பொருட்களை ஆன்லைனில் வாங்க முயன்றபோது, குறைந்தது 168 பேர் 20,000 சிங்கப்பூர் டாலர்களை ஏமார்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Singapore Business | சிங்கப்பூர் சில்லறை வர்த்தகம் அதிகரிப்பு! மதுபான விற்பனை அமோகம்!