சிங்கப்பூரின் சில்லறை வர்த்தகம் ஜூலையில் 1.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தைக் காட்டிலும் 1 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரின் சில்லறை விற்பனை மாதம் மாதம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தச் சில்லறை வர்த்தகத்தின் மதிப்பு 3.9 பில்லியன் சிங்கப்பூர் டாலர் பாதிவாகியுள்ளது. அதில் 12.6 சதவீதம் ஆன்லைன் சில்லறை விற்பனையாக பதிவாகியுள்ளது. சில்லறை வர்த்தகத் துறையில் உள்ள பெரும்பாலான தொழிற்துறைகள் ஆண்டுக்காண்டு அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளன.
உண்ணும் உணவுப் பொருட்கள் மற்றும் மதுபான விற்பனை மிக அதிகளவில், அதிகபட்சமாக 21 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. சிறு சிறு கடைகள், மோட்டார் வாகன கனரக உதிரிபாகங்கள் ஆகியவற்றின் விற்பனை 7 சதவீதத்திறகும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது. பெட்ரோல் சேவை நிலையங்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 16 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கட்டுமான பணியிடங்களில் பாதுகாப்பு விதிமீறல்! கூடுதல் அதிரடி சோதனைகளுக்கு சிங்கப்பூர் அரசு ஏற்பாடு
சிங்கப்பூரின் ஜூலை மாத சில்லறை விற்பனை, 1.1 சதவீதம் வளர்ச்சி அடைந்திருத்தாலும், அது 2.1 சதவீதம் வளர்ச்சி காணும் என்ற புளூம்பெர்க் கருத்துக் கணிப்பு பொய்யாகியுள்ளது. சிங்கப்பூரில், ஜூலை மாதம் கனரக வாகன விற்பனை 7.3 சதவீதம் அதிகரித்ததால், ஒட்டுமொத்த சில்லறை விற்பனை 0.6 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிகரிக்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள்! போட்டி போடும் புதிய மற்றும் நவீன நிறுவனங்கள்!