இந்த விமான சேவை அக்டோபர் 1 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர் குறித்து ஒரு முக்கிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸின் முதல் வகுப்பு செக்-இன் கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3ல் உள்ள செக்-இன் கவுன்டர்கள் அக்டோபர் 1ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு செக்-இன் கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், பிரீமியம் செக்-இன் கவுன்டர்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
BSNL : தினமும் 2 ஜிபி டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.397க்கு இப்படியொரு திட்டமா.!!
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அட்னான் காசிம், அனைத்து கேபின் வகுப்புகளிலும் பயணிகளின் தேவையை கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறியுள்ளார்.